ஹாலிவுட் இயக்குனரிடம் கதையை திருடி படமாக்கிய ஏ.ஆர் முருகதாஸ்… கண்டுப்பிடித்த இயக்குனர்!..

சினிமாவை பொறுத்தவரை அதில் வெளியாகும் திரைப்படங்களை மக்கள் திரையரங்குகளில் சென்று பார்ப்பதை வைத்தே அவர்களுக்கு வருவாய் வருகிறது. ஆனால் திரையரங்கில் கட்டணம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பலரும் அதை இணையத்தில் ஏத்தி பார்த்துவிடுகின்றனர்.

இப்படி படம் பார்ப்பது தவறு என திரைப்பட ஊழியர்களும் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர். ஆனால் சில இயக்குனர்கள் படத்தையே வேறு ஒரு மொழியில் இருந்து திருடி தமிழில் படமாக்குகின்றனர். இந்த வகையான பட திருட்டுகள் மக்கள் செய்வதை விட பெரும் தவறாக பார்க்கப்படுகிறது.

தமிழின் பிரபலமான இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸும் இப்படியான செயலை செய்துள்ளார். தமிழில் ரமணா திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். சூர்யா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வெளியான திரைப்படம் கஜினி.

இந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த வருடத்தின் சிறந்த படம் என கூறப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு அதே படத்தை ஹிந்தியிலும் எடுத்தார் ஏ.ஆர் முருகதாஸ். அப்போதே ஹிந்தியில் 100 கோடிக்கும் அதிகமாக ஓடி ஹிட் அடித்தது கஜினி. கஜினி படத்தின் ஹிந்தி வெர்ஷனில் நடிகர் அமீர்கான் நடித்திருந்தார்.

ஏ.ஆர் முருகதாஸ் காபி அடித்த கதை:

2000 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான மெமண்டோ என்னும் திரைப்படத்தின் கதையை காபி அடித்துதான் கஜினி என்ற திரைப்படமாக்கி இருந்தார் முருகதாஸ். ஆனால் அதற்காக அந்த இயக்குனருக்கு எந்த ஒரு தொகையும் கொடுக்கவில்லை.

பிறகு தாமதமாக இந்த விஷயம் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலனுக்கு தெரிந்துவிட்டது. அவர் ஒரு பேட்டியில் கூறும்போது நான் எடுத்த படத்தை காபி அடித்தது கூட பரவாயில்லை. ஆனால் அதை சரியாக படமாக்க கூட இல்லை என வருத்தம் தெரிவித்திருந்தார்.

 

Related Articles

Next Story