ஆளாளுக்கு விரட்டினா எப்படி? முருகதாஸை பாடாய்படுத்திய நடிகர்கள் - இப்போ அவருடைய நிலைமை?
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்தவர் முருகதாஸ். ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகு முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் ஒரு இயக்குனராக தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதுமட்டுமில்லாமல் குஷி படத்தில் எஸ் .ஜே சூர்யாவுடன் சேர்ந்து பணியாற்றினார். அதன் பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கஜினி, விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி ,சர்க்கார் போன்ற தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த முருகதாஸை தமிழ் சினிமா கொண்டாடி தீர்த்தது.
அதிலும் சர்க்கார் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் அவரின் இயக்கத்தில் ஸ்பைடர் ,தர்பார் போன்ற படங்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் தர்பார் படத்தின் தோல்வி முருகதாஸிற்கு ஒரு பின்னடைவை தந்தது. அதன் பிறகு முருகதாஸிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லை. சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லை .இதற்கிடையில் சிவகார்த்திகேயன் வேறு ஒரு படத்திற்காக அவரை பிஸியாக்கிக் கொண்டார். மேலும் விஜயும் அவரை கண்டு கொள்ளவே இல்லை.
இதனால் முருகதாஸ் இனிமேல் கோலிவுட்டை நம்பினால் பிரயோஜனம் இருக்காது என்று நினைத்து பாலிவுட் பக்கம் சென்று விட்டார். சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் படமும் ஏற்கனவே சல்மான்கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்ற தகவலும் கசிந்துள்ளது. பாலிவுட்டிலாவது முருகதாஸ் தன்னுடைய திறமையை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.