கலைஞருக்கும் கேப்டனுக்கும் இடையே மோதல்...! விரிசலுக்கு காரணமாக இருந்த விஜய் பட இயக்குனர்...
சினிமாவில் நடிகராக இருக்கும் போதே மக்களுக்கு பல நல்ல உதவிகளை செய்தவர் நடிகர் விஜயகாந்த். அந்த எண்ணத்தாலயே மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.இதுவும் அரசியலுக்கு வர காரணமாக இருந்தது. இவரது அரசியல் காலத்தில் நடிகர் தியாகு, வாகை சந்திரசேகர் ஆகியோரும் அடங்குவர்.
இவரது அரசியல் பயணத்திற்கு முன் இவர் கலைஞருடன் மிகவும் நெருங்கி பழகி வந்தார். 1995ஆம் கால கட்டத்தில் மிக நெருக்கடியான சமயத்தில் கூட கலைஞருக்கு விழா எடுத்து வெற்றியும் கண்டார். மேலும் அவரோடு சேர்ந்து பல திட்டங்களுக்கு வழிவகுத்தார். ஏன் விஜயகாந்த் திருமணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் தான்.
இதையும் படிங்கள் : மிட் நைட்ல அத பண்ணவதான நீ…! சொல்லட்டுமா…? பிரபல டாக்டர் நடிகையை மடக்கிய பயில்வான்…
இப்படி இருந்த கேப்டன் ஏன் கலைஞருடன் கூட்டணி அமைக்கவில்லை என்ற சந்தேகத்திற்கு தக்க பதிலை தந்தார் விஜயகாந்தின் மானசீக சிஷ்யனாக இருக்கும் மீசை ராஜேந்திரன். விஜயுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் முருகதாஸ். இவரது திருமணத்திற்கு கலைஞர்தான் தலைமை தாங்கினாராம்.அப்போது கலைஞர் மணமக்களை வாழ்த்தி மேடையில் பேசிக்கொண்டிருந்த போது விஜயகாந்த் அந்த சமயம் தான் திருமணத்திற்கு உள்ளே வருகிறாராம்.
இவரை பார்த்ததும் கலைஞரின் பேச்சைக் கூட கேட்காமல் கூட்டத்தில் இருந்தவர்கள், ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி, விசிலடித்து அவர் பக்கம் திரும்பி விட மேடையில் இருந்த கலைஞர் அப்படியே இறங்கி கிளம்பி விட்டாராம். இந்த நிகழ்வு தான் இவர்களின் விரிசலுக்கு முதல் காரணம் என மீசை ராஜேந்திரன் கூறினார்.