ஏஆர்.முருகதாஸை கடத்திச் சென்ற குண்டர்கள்!.. காப்பாற்றிய பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்திற்கு பிறகு வெற்றி இயக்குனர்கள் இருந்த தடம் தெரியாமல் போய்விடும். அந்த வகையில் கஜினி, துப்பாக்கி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து ஒரு சமயத்தில் மிகவும் டிரெண்டிங்காக இருந்த இயக்குனர் ஏஆர்.முருகதாஸ். ஆனால் சில ஆண்டுகளாக அவரை லைம் லைட்டில் காணமுடிவதில்லை.
மீண்டும் லைம் லைட்டில்
நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் 1947 என்ற படத்தை இயக்கி படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்தும் ஒரு படம் இயக்க இருக்கிறார் முருகதாஸ். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கோலோச்சுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த நிலையில் முருகதாஸை பற்றிய ஒரு ஃப்ளாஸ்பேக்கை பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்திருந்தார். அதாவது கஜினி படத்தை எடுக்கும் போது ஏகப்பட்ட சிக்கலில் சிக்கியிருந்தாராம் முருகதாஸ். அந்தப் படத்தை சேலம் சந்திரசேகர்
என்பவர்தான் தயாரித்தாராம். முதலில் குறைந்த பட்ஜெட் என்று சொல்லிவிட்டு கடைசியாக படத்தின் பட்ஜெட் 14 கோடி ஆகிவிட்டதாம்.
சூர்யாவுக்கு சம்பளபாக்கி
அதனால் சூர்யாவுக்கு 20 லட்சம் சம்பள பாக்கியும் வைத்திருந்தாராம் சந்திரசேகர். ஆனால் பட ரிலீஸ் சமயத்தில் சூர்யாவுக்கு தரவேண்டிய பாக்கியை கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று சூர்யாவின் அப்போதைய மேனேஜரும் இப்போதைய தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா சொல்ல வேறு வழியில்லாமல் கஜினி படத்தை குறைந்த விலைக்கு ஹிந்தி ரைட்ஸுக்கு சந்திரசேகர் விற்று அந்த பணத்தை சூர்யாவுக்கு கொடுத்திருக்கிறார்.
கஜினி படமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் கஜினி படத்தை ஹிந்தியில் எடுக்க முன்வர ஹிந்தியிலும் முருகதாஸே இயக்க வேண்டும் என வலியுறுத்தினார்களாம். முருகாதாஸும் சரி என்று சொல்லி பட்ஜெட் 100 கோடி வரை ஹிந்தியில் எடுக்க முன்வந்திருக்கிறார் முருகதாஸ். விஷயம் அறிந்த சந்திரசேகர் போலீஸில் ‘முருகதாஸும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஏற்கெனவே கஜினியின் ஹிந்தி ரைட்ஸை நான் வைத்திருக்கும் போது எனக்கு தெரியாமல் அதிக விலைக்கு ஹிந்தி ரைட்ஸை கைப்பற்றியிருக்கிறார்கள்’ என்று முருகதாஸ் மீது புகார் அளித்தாராம்.
முருகதாஸை கடத்த திட்டம்
எழுத்தாளர் சுஜாதா மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்த முருகதாஸும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது 4 பேர் சேர்ந்த ஒரு கும்பல் முருகதாஸை அலேக்கா தூக்கிக் கொண்டு சென்று விட்டதாம். இதனை அறிந்த திரையுலகம் ஒரே பரபரப்பில் இருக்க நேராக தயாரிப்பு கவுன்சிலுக்கு சென்றிருக்கிறது. அங்கே ராதிகா இருக்க அவரிடம் போய் அனைவரும் விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.
அந்த சமயம் கலைஞர் தான் முதலமைச்சராக இருந்திருக்கிறார். அதனால் உடனடியாக கலைஞரிடம் நேரடியாக பேசக் கூடியவர்களில் ராதிகாவும் ஒருவர் என்பதால் அவரிடம் முறையிட்டிருக்கின்றனர். உடனே ராதிகா கலைஞருக்கு போன் செய்து தக்க நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கிறார். இவர் சொன்ன அடுத்த 15 நிமிடத்தில் முருகதாஸை காப்பாற்றியிருக்கிறது போலீஸ். கடத்திச் சென்றவர்கள் சேலம் போலீஸார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கெட்ட பழக்கமெல்லாம் ஒன்னுமில்ல!.. வேற ஏதோ நடந்துபோச்சு!.. விஜயகாந்த் பற்றி உருகும் சந்திரசேகர்…