More
Categories: Cinema News latest news

சல்மான் கானுக்கு சங்கு ஊத காத்திருக்கும் ஏ.ஆர். முருகதாஸ்?.. அப்போ குட் பேட் அக்லியும் ஃபிளாப்பா?..

ஒரு பக்கம் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு அடுத்ததாக சல்மான்கான் பணம் கிடைத்த நிலையில் அந்தப் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

அந்த படத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 23 படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏ.ஆர். முருகதாஸ் பேசிய பேச்சு சல்மான்கான் வா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: திரை உலகைக் கலக்கப் போகும் இன்றைய படங்கள்… ஜெயிக்கப் போவது யாரு?

அமீர்கானை வைத்து கஜினி படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார். தமிழில் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த கஜினி படத்தை அதே பெயரில் ஹிந்தியில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான மெமென்டோ படத்தின் அட்டு காப்பி தான் கஜினி என்பது தெரியவந்த நிலையில், தொடர்ந்து கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் வாய்ப்புத் தந்த நிலையில், அந்த படத்தை நிறுத்தி வைத்துவிட்டு சல்மான்கான் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், அமீர்கான் ஒருமுறை தன்னிடம் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு படத்தை தொடங்கினால் அந்த படம் அப்போதே 50 சதவீதம் ஃபிளாப் என்றார் என ஏ.ஆர். முருகதாஸ் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இவ்ளோ சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா? மனைவி சொன்ன சீக்ரெட்.. அட கடவுளே

அப்புறம் எதுக்கு சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் படம் இயக்கி வருகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதைப்போல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து படப்பிடிப்பை தொடங்கியுள்ள நிலையில், அந்தப் படமும் ஃபிளாப் ஆகுமா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது என்றும் லியோ படம் சொதப்ப காரணமே ரிலீஸ் தேதியை ஆரம்பத்திலேயே அறிவித்ததுதான் என லோகேஷ் கனகராஜும் சமீபத்தில் புலம்பினாரே என முட்டுக் கொடுத்து வருகின்றனர். இயக்குநரின் சரியான திட்டமிடல் இருந்தால் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு படத்தை வெளியிடலாம் பல படங்கள் அப்படி வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. ரிலீஸ் தேதி அறிவிக்காமல் ஆரம்பிக்கப்பட்டு விடாமுயற்சி, கங்குவா போல சில படங்கள் இழுத்தடித்துக் கொண்டே செல்வதையும் பார்த்து வருகிறோமே என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மொத்த பட்டனையும் கழட்டி அழகை காட்டும் ராஷ்மிகா மந்தனா!.. சும்மா அள்ளுது!..

Published by
Saranya M

Recent Posts