ஒரு காலத்தில் ஷங்கர், மணிரத்னம் அளவுக்கு அவர்களுக்கு நிகராக பேசப்பட்ட இயக்குனர் என்றால் அது AR.முருகதாஸ் தான். நேரடியாக தெலுங்கு படம் சிரஞ்சீவியை நாயகனாக வைத்து எடுத்து சூப்பர் ஹிட், அடுத்து நேரடியாக ஹிந்தி படம், அதுவும் அமீர் கான் ஹீரோ. கஜினி ரீமேக் அதுவும மெகா ஹிட் , முதல் 100 கோடி வசூல் என கலக்கி கொண்டிருந்தார் முருகதாஸ்.
அதன் பிறகு தமிழுக்கு வந்து 7ஆம் அறிவு படத்தில் சரிந்தாலும், துப்பாக்கி, கத்தி என மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து நம்பர் 1 இயக்குனராக வலம் வரத்தொடங்கினர் ஏ.ஆர்.முருகதாஸ். கத்தி படத்தின் போதே, அறம் பட இயக்குனர் கோபி நயினார் அந்த கதை என்னுடையது என பஞ்சாயத்து செய்தார்.
அதற்கடுத்து தான் சர்கார் படம். அதில் தான் கதை திருட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அப்போது எழுத்தாளர் சங்கத்தில் இருந்து அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது குற்றம் முருகதாஸ் மீது சுமத்தப்பட்டு கிட்டத்தட்ட நிரூபணமானது என எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்கியராஜ் தெரிவித்தார்.
அதன் பிறகு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படமும் சரியாக போகாத காரணத்தால், தற்போது வரை எந்த பெரிய ஹீரோ படமும் இயக்காமல் இருந்து வருகிறார். விஜய் படம் கிட்டத்தட்ட உறுதியான நேரத்தில் கதையின் இரண்டாம் பாதி விஜய்க்கு பிடிக்காத காரணத்தால் அப்படமும் டிராப் ஆனது. நெல்சன் விஜயின் 65வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
இதையும் படியுங்களேன் – நான் சினிமாவுக்கு தகுதியே இல்லாதவன்.! மேடையில் உளறிய முருகதாஸ்.!
இறுதியாக முருகதாஸ், சிவகார்த்திகேயன் வரை கதை கூறியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், எதுவும் ஒர்கவுட் ஆகாததால், அனிமேஷன் படத்தை சத்தமில்லாமல் இயக்கி வருகிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை இயக்க வேண்டிய முருகதாஸ் தற்போது அனிமேஷன் இயக்கி வருகிறார்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…