ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் சூப்பர்ஹீரோ படம்... நாயகன் யார் தெரியுமா?
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்க இருக்கும் சூப்பர்ஹீரோ படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முருகதாஸ். முதல் படம் நல்ல ரீச்சை கொடுத்த நிலையில், அவர் இயக்கிய இரண்டாவது படமான ரமணா மாஸ் ஹிட் கொடுத்தது. மன்னிப்பு தமிழில பிடிக்காத ஒரே வார்த்தை என கேப்டன் விஜயகாந்த் பேசியதை இன்றும் ரசிகர்கள் மறக்கவில்லை.
இதை தொடர்ந்து இவருக்கும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்து சூர்யாவை வைத்து கஜினி படத்தினை இயக்கினார். இப்படம் கோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. அமீர்கானை வைத்து இந்தியில் கஜினி ரீமேக்கானது. அதையும் முருகதாஸே இயக்கினார்.
தொடர்ந்து, விஜயின் நடிப்பில் துப்பாக்கி, கத்தி என வெற்றி படங்களின் லிஸ்ட் எகிறிக்கொண்டே இருந்தது. கடைசியாக விஜயை வைத்து சர்கார், ரஜினிகாந்தினை வைத்து தர்பார் படங்களை இயக்கி இருந்தார். இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் ரீச்சாகவில்லை.
இந்நிலையில் முருகதாஸ் தனது அடுத்த படத்தினை சூப்பர்ஹீரோ படமாக இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் நாயகனாக சிம்பு நடிக்க இருக்கிறார். தற்போது பத்து தல ஷூட்டிங்கில் இருக்கும் சிம்பு அதை முடித்துக்கொண்டு விடுமுறைக்காக வெளிநாடு செல்கிறார். அவர் இந்தியா திரும்பியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.