Cinema News
மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை வெல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்?!.. விருது பட்டியலில் அந்த படம்!….
AR Rahman Oscar: ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா சேகர் மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர். அவர் திடீர் மரணம் ரஹ்மான் குடும்பத்தை புரட்டிப்போட்டது. அப்பாவிடம் இசையை கற்றுக்கொண்ட ரஹ்மான் இளையராஜா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு வாசிக்கும் வேலை செய்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களம் இறங்கினார். இந்த படத்தில் இடம் பெற்ற ’சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பாடியது. அதேபோல் ‘புது வெள்ளை மழை’ பாடல் சூப்பர் மெலடியாக அமைந்தது. மேலும், ‘காதல் ரோஜாவே’ பாடல் காதலின் பிரிவை உணர்த்தியது.
இதையும் படிங்க: இந்த விஷயத்துல விஜய பாராட்டியே ஆகணும்!.. இப்போ புகழ்றாரா? இல்ல திட்றாரா?..
ரஹ்மானின் புது ஒலியும், இசையும் இளசுகளை கட்டிப்போட்டது. ஜென்டில்மேன் படத்தில் அவர் போட்ட சிக்கு புக்கு ரயிலே பாடலும், காதலன் படத்தில் அவர் போட்ட ஊர்வசி ஊர்வசி மற்றும் முக்காபல்லா பாடலும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துப்போய் அவர்களை ஆட்டம் போட வைத்தது.
தொடர்ந்து ஜூன்ஸ், இந்தியன், காதல் தேசம், காதலர் தினம் உள்ளிட்ட பல படங்களிலும் இசையமைத்து முன்னணி மற்றும் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக ரஹ்மான் மாறினார். அப்படியே ஹிந்தி சினிமா பக்கமும் போய் கலக்கினார். ரஹ்மானின் இசைக்கு நடன அசைவுகளை அமைக்க முடியாமல் அங்கிருந்த நடன இயக்குனர்கள் தடுமாறினார்கள்.
ரஹ்மான் வந்த பின் இளையராஜாவின் மவுசே கொஞ்சம் குறைந்து போனது. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் ரஹ்மான் பக்கம் சென்றார்கள். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ஹிந்தி படமான ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இசை மற்றும் பாடல் என 2 ஆஸ்கர் விருதுகளை 2009ம் வருடம் வாங்கினார் ரஹ்மான்.
இதை தமிழ் சினிமாவே விழா வைத்து கொண்டாடியது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவும் கலந்து கொண்டு ரஹ்மானை வாழ்த்தினார். இந்நிலையில், மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை ரஹ்மான் வாங்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 2025ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல், பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதல் கட்ட தேர்வு பட்டியலில் ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் திரைப்படம் இடம் பெற்றிருக்கிறது.
மலையாளத்தில் உருவான இப்படத்தில் பிரித்திவிராஜ் நடித்திருந்தார். தமிழிலும் இப்படம் வெளியானது. சிறந்த பாடல் பிரிவில் ஆடுஜீவிதம் படத்தின் Istigfar, puthu mazha ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளது. பின்னணி இசை பிரிவில் 146 திரைப்படங்கள் இருக்கிறது. இதில், வாக்கெடுப்பு நடத்தி 15 பாடல்கள் மற்றும் 20 பின்னணி இசை அடுத்த கட்டத்திற்கு தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது பட்டியலில் ரஹ்மான் பெயர் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிகில் பட நடிகை!.. அட இவங்களா?.. வெளியான அப்டேட்!..