மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். முதல் படத்திலிருந்து தேசிய விருது வாங்கியவர் இவர். ரஹ்மானின் துள்ளலான இசை இளசுகளை ஆட்டம்போட வைத்தது. இவரின் வரவால் இளையராஜாவின் மார்க்கெட்டே குறைந்து போனது.
ரோஜாவுக்கு பின் வெளிவந்த ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், திருடா திருடா, இந்தியன் என பல திரைப்படங்களில் ரஹ்மான் கொடுத்த பாடல்கள் வைரல் ஹிட். அப்படியே பாலிவுட்டுக்கும் போய் ரங்கீலாவில் ரவுண்டு கட்டி அடித்தார். ரஹ்மானின் இசைக்கு நடனம் அமைக்க முடியாமல் பாலிவுட் நடன இயக்குனர்கள் தடுமாறினார்கள்.
அதன்பின் பல வருடங்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அதேநேரம் சமீப காலமாக அனிருத் முன்னணியில் இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் டங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டிக்காக கலந்து கொண்ட போது ‘நீங்கள் ஆஸ்கார் விருது வாங்கிய ஸ்லம்டாக் மில்லியனியர் படத்துக்கான இசை உங்களின் சிறந்த படைப்பு அல்ல’ என்று பேட்டி எடுத்தவர் சொன்னர்.
அதில், கோபமடைந்த ரஹ்மான் ‘ஸ்லம்டாக் மில்லினியர் எனது சிறந்த படைப்புதான்.. உங்களுக்கு சரியாக புரியவில்லை.. அந்த படத்திற்கு நான் கொடுத்த இசைக்கலவை ஹாலிவுட்டில் இல்லை.. அதனால்தான் மேற்கத்திய மக்களுக்கு அந்த அந்த இசை பிடித்தது.. தவறாக வாக்களிக்க அவர்கள் ஒன்று முட்டாள்கள் அல்ல’ என காட்டமாக கூறியிருக்கிறார்.