என்னடா பண்ணி வச்சிருக்க- ஆமீர்கான் முன்னிலையில் ரஜினி பட இயக்குனரை திட்டிய பாரதிராஜா?...
தமிழ் சினிமாவில் கம்மெர்சியல் இயக்குனர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன் போன்ற டாப் நடிகர்களை வைத்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் “படையப்பா” திரைப்படத்தின் பாடல் பதிவின்போது ஏற்பட்ட ஒரு சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.
காத்திருந்த ஆமீர்கான்
“படையப்பா” திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பதை பலரும் அறிவார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர். ஆதலால் அவருடன் பணியாற்றும் ஒவ்வொரு இயக்குனருக்கும் இந்தந்த தேதியில் ரெக்கார்டிங் வைத்துக்கொள்ளலாம் என்று தனி தனி அட்டவனையை கொடுத்துவிடுவாராம்.
அவ்வாறு “படையப்பா” திரைப்படத்திற்கு கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒரு அட்டவணையை கொடுத்திருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு தேதியில், “ஓஹோஹோஹோ கிக்கு ஏறுதே” என்ற பாடலை பதிவு செய்வதாக இருந்தது. அதன்படி ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவிற்குச் சென்றிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
அப்போது ஸ்டூடியோவின் காத்திருக்கும் அறையில் ஆமீர் கான், ஹிந்தி பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், பாரதிராஜாஆகியோர் அங்கே காத்துக்கொண்டிருந்தார்களாம். “லகான்” படத்தின் பாடல் பதிவிற்காக ஆமீர் கானும் ஜாவேத் அக்தரும் காத்திருந்தார்களாம். அதே போல் “தாஜ்மஹால்” படத்தின் பாடல் பதிவிற்காக பாரதிராஜா காத்திருந்தாராம்.
வசியம் வச்சிருக்கியா...
இந்த நிலையில் ரெக்கார்டிங் அறையில் இருந்து வந்த ஒருவர், கே.எஸ்.ரவிக்குமாரிடம், “சார் உங்களை கூப்புடுறாரு” என கூறியிருக்கிறார். அப்போது பாரதிராஜா, “டேய், அவனுக்கு என்னடா வசியம் வச்ச. ஆமீர்கான் உட்கார்ந்திருக்கான், இங்க நான் உட்கார்ந்திருக்கேன். எங்களை எல்லாம் கூப்புடாம உன்னைய மட்டும் கூப்புடுறான்” என கூறினாராம்.
அதன்பின் உள்ளே சென்ற ரவிக்குமார், ரஹ்மானிடம், “சார், வெளில பெரிய ஆளுங்களாம் உட்கார்ந்திருக்காங்க. ஆனா ஏன் என்னைய கூப்புட்டீங்க” என கேட்டிருக்கிறார். அதற்கு ரஹ்மான், “நான் உங்களுக்குத்தான் இன்னைக்கு செட்யூல் போட்ருக்கேன். ஆனா அவங்க வந்து உட்கார்ந்திருக்காங்க. போகச் சொன்னா நாங்க வெயிட் பண்றோம்ன்னு சொல்றாங்க, நான் என்ன பண்னமுடியும்?” என கூறினாராம்.
இதையும் படிங்க: தீவிர காய்ச்சலிலும் உடல் நடுங்கியபடி பல மணி தூரம் பயணித்த டி.எம்.எஸ்… எல்லாமே ஒரே ஒரு ரசிகருக்காக…