‘பத்து தல’ படத்திற்கு நான் ஏன் கம்போஸ் பண்ணேன்?.. காரணத்திற்கான ரகசியத்தை பகிர்ந்த இசைப்புயல்..
சிம்பு, ஒபிலி கிருஷ்ணா கூட்டணியில் உருவாகும் படம் தான் ‘பத்து தல’ திரைப்படம். சமீபத்தில் தான் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தேறியது. விழாவிற்கு திரைபிரபலங்கள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் நல்ல முறையில் வந்துள்ளது. மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் சிம்பு மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்வதற்காக சில மாதங்கள் பாங்காங்கில் தங்கி பயிற்சிகளை முடித்தார்.
பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிம்பு முற்றிலுமாக வித்தியாசமான கெட்டப்பில் வருவார் என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா. அவர் கூறியதை போலவே சிம்பு வந்தாலும் ஒரு பக்கம் காளை படத்தில் வரும் அம்பி கெட்டப்பிலும் இருந்தார்.
எப்படியோ மாஸாக வந்திறங்கிய சிம்பு தனது அனல் பறிக்கும் பேச்சால் விழா முடியும் வரை ரசிகர்களை உற்சாகத்திலேயே வைத்திருந்தார். அதனை அடுத்து பேசிய விழாவின் நாயகன் ஏஆர். ரஹ்மான் படத்தை பற்றியும் படத்தில் அமைந்த இசையை பற்றியும் சில விஷயங்களை கூறினார்.
முதலில் பத்து தல படத்திற்காக ரஹ்மான் ஒப்புக்கொண்டதற்கு காரணமே சிம்பு தானாம். மேலும் படத்தின் இயக்குனரான கிருஷ்ணாவும் ஒரு விதத்தில் காரணம் என்று கூறினார். ஏற்கெனவே கிருஷ்ணாவுடன் சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்த ரஹ்மான் கிருஷ்ணாவுடனான தன் நட்பை பகிர்ந்தார்.
இவர்கள் இருவரால் தான் இந்தப் படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறினார். மேலும் சிம்புவுடன் ஐந்தாவது முறையாக இணைந்த ரஹ்மான் இந்தப் படத்தில் மட்டும் தான் சிம்புவை பாடவைக்க முடியவில்லை என்றும் கூறினார்ம். ஏனெனில் அந்த சமயத்தில் சிம்பு தாய்லாந்தில் இருந்ததால் அவர் பாட வேண்டிய பாடலை தானே பாடியதாக கூறினார்.
இதையும் படிங்க : ‘வரலாறு’ படத்திற்காக அஜித் பட்ட கஷ்டம்!.. வெற்றிக்கு பின்னாடி இருக்கும் ஒரு சோகமான சம்பவம்..