சிவாஜி பட பாட்டுல இருந்துதான் சுட்டாங்களா?!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டு உருவான விதம் இப்படித்தான்!.

Sangamam movie Song: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஹ்மான் மற்றும் விந்தியா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம்தான் சங்கமம். நல்ல ஸ்கிரீன் ப்ளே, கதை என படம் ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால் தில்லானா மோகனாம்பாள் படம் மாதிரியே கதை ஒன்றி இருந்ததால் கலவையான விமர்சனத்தை பெற்றது.

படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது ஏஆர் ரஹ்மான் இசைதான். படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கம் என்ற பாடல் இன்றளவும் எந்த ஒரு விழா மேடையானாலும் நிகழ்ச்சியானாலும் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்காது.

இதையும் படிங்க: அந்த படத்துல கூட வாய்ப்பு கேட்டேன்!. ஆனா விஜய் கொடுக்கல!.. அதிரவைத்த ஷோபா சந்திரசேகர்..

ரஹ்மான் ஹிட் லிஸ்ட்டில் எப்பவுமே இந்தப் பாடலுக்கு ஒரு தனி அங்கீகாரம் உண்டு. பாடலோடு அந்த பாட்டில் அமைந்த காட்சிகளும் நெஞ்சை உறைய வைக்கும். தன் அப்பா இறந்தாலும் இந்த கலைக்காக எல்லா துயரங்களையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்த்துவிதமாக .

ரஹ்மான், அப்பாவான மணிவண்ணன் இறந்ததை கூட வெளிக்காட்டாமல் அவரை அருகிலேயே உட்காரும் படி செய்து அவர் முன் சிரித்துக் கொண்டே ஆடுவது போல காட்சிகள் அமைந்திருக்கும். இந்தக் காட்சிக்கு எதாவது இன்ஸ்பிரேஷன் எதுவும் இருக்கா என ரஹ்மானும் சுரேஷ் கிருஷ்ணாவும் வசனகர்த்தாவான பூபதியிடம் கேட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: விஜய் யூஸ் பண்ண கெட்டவார்த்தை எந்தளவுக்கு என்னை பாதிச்சது தெரியுமா? பாடகி கொடுத்த ஷாக்

அதற்கு அவர் சிவாஜி நடிப்பில் வெளியான ராஜபாட் ரங்கதுரை படத்தில் அமைந்த சிரிக்கிறேன் சிரிக்கிறேன் என்ற பாடலில் உள்ளே இருக்கும் சோகத்தை மறைத்து சிவாஜி சிரித்துக் கொண்டே ஆடியிருப்பார், பாடியிருப்பார். அதே போல்தான் இந்த பாடல் காட்சியும் வேண்டும் என பூபதி சொல்ல இந்தப் பாடலை படமாக்கியிருக்கிறார்கள்.

 

Related Articles

Next Story