இசைஞானி கூட அத செய்யலையே!.. முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

Ilaiyaraja vs AR Rahman: எத்தனையோ இசைக் கலைஞர்களை இந்த தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. ஆனால் அவர்களில் இளையராஜா கட்டி வைத்த கோட்டை ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகவே பார்க்கப்படுகிறது. 70களின் இறுதியில் அடியெடுத்து வைத்த இளையராஜா இன்றளவும் இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார்.
இளையராஜாவிற்கு பிறகு அதே புகழோடு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். 90களில் ஒரு பெரும் பிரளயத்தையே இசையில் ஏற்படுத்தியவராக ரஹ்மான் திகழ்ந்தார். ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஹ்மான் முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தார்.
இதையும் படிங்க: ஃபிளாப் ஆக வேண்டிய படத்தை காப்பாற்றிய சந்திரபாபு!.. மனுஷன் அதுல செம கில்லாடி!..
அதுவரை மனதிற்கு இதமான ஹார்மோனிய இசையையே கேட்டுவந்த நமக்கு முழுவதும் வெஸ்டர்ன் இசையோடு புதுமையான ஒரு உணர்வை ஏற்படுத்தியவர் ரஹ்மான். திலீப்குமாராக உள்ளே நுழைந்தவர் எப்படி ஏஆர்.ரஹ்மான் ஆனார் என்பதற்கு ஒரு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ரோஜா படம் ஆடியோ கேசட் ரிலீஸ் செய்யும் போது அந்த ஆடியோ கேசட் கவரில் என்ன பெயர் போடட்டும் என ரஹ்மானிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரஹ்மானின் தாயார்தான் ஏஆர்.ரஹ்மான் பெயரை பரிந்துரைக்கிறார். அதிலிருந்தே அவர் பெயர் ஏஆர்.ரஹ்மான் என்றாகிவிட்டது.
இதையும் படிங்க: என்னிடம் ரஜினி வாய் விட்டு கேட்டது இது ஒன்னை தான்.. வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய தகவல்..!
அதுமட்டுமில்லாமல் அந்த கேசட் கவரில் தன்னுடைய பெயர் மட்டுமில்லாமல் தன்னுடன் பணிபுரிந்த மற்ற இசைக் கலைஞர்களின் பெயர்களையும் போட பரிந்துரை செய்திருக்கிறார் ரஹ்மான். அதுவரை எந்த கேசட்டிலும் மற்ற இசைக் கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்காது. இதை முதன் முதலில் கொண்டுவந்தவர் ரஹ்மான் தான் என்று சொல்லப்படுகிறது.