சிவா நீங்க ஒரு சூப்பர் ஸ்டார்..இதுக்கெல்லாம் வந்துருக்கீங்க..?sk -வை கூச்சப்பட வைத்த ஏஆர்.ரகுமான்...
தன்னுடைய மிரட்டலான இசையில் ஆஸ்கார் விருது வரை சென்று இந்தியாவிற்கே பெருமை தேடி தந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைஞானி இளையராஜாவிடமும் உதவியாளராக இருந்துள்ளார். இவர் இசையில் குறிப்பிட்ட பாடல்கள் என்று விரல் விட்டு எண்ண முடியாது.
அந்த அளவிற்கு இவர் இசையமைத்த எல்லா பாடல்களுக்கும் இளசுகள் சொக்கி போய்க் கிடக்கின்றனர். முதன் முதலின் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ படம் தான் இவர் இசையமைத்த முதல் படம். படத்திலுள்ள பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இன்று வரை அந்த படத்தில் உள்ள பாடல்களுக்கு ரசிகர்கள் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார். இசைப்புயல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரகுமான் திடீரென் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். 99 சாங்க்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் அவரே இசையமைத்து வசனமும் எழுதியிருக்கிறார். ஒரு சமயம் அந்த படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் , எஸ்.ஜே.சூர்யா, கௌதம் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் கலந்து கொண்டு அந்த படத்தின் அனுபவம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏஆர் ரகுமான் அவர்கள் பேசி முடித்ததும் மேடைக்கு நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது சிவகார்த்திகேயனிடம் ”நீங்கள் தான் இப்பொழுது சூப்பர் ஸ்டார் ஆகி விட்டீர்கள். இந்த சின்ன விழாவிற்கெல்லாம் வந்துள்ளீர்கள்” என கூறினார். அப்போது சிவகார்த்திகேயன் வெட்கப்பட்டு ”நீங்கள் கூப்பிட்டு வராமல் இருந்தால் எப்படி சார்” என பதில் கூறினார்.