‘ராயன்’ படத்திற்கு பிறகு முடிவை மாற்றிக் கொண்டாரா? தனுஷை பார்த்து வியந்த இசைப்புயல்
Rayaan Movie: தனுஷ் நடிப்பில் அவரது 50வது படமாக தயாராகிக் கொண்டு வருகிறது ராயன் திரைப்படம். இரண்டாவது முறையாக தனுஷே இயக்கி இந்தப் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். படத்தில் துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு சென்னையில்தான் நடைபெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கையில் இந்தப் படத்தின் ப்ரிவியூவை ரஹ்மான் பார்த்திருக்கிறார். அதுவும் ரஹ்மான் இதுவரைக்கும் எந்த படத்தின் சூட்டிங்கிற்கும் நேராக சென்று பார்த்ததே இல்லையாம்.
இதையும் படிங்க: சண்டைக்காட்சியில் நடிக்கும் போது ரஜினிகாந்த் இதை செய்யவே மாட்டாராம்… மூன்றுமுகம் நடந்த அதிர்ச்சி சம்பவம்!…
ஆனால் ராயன் படத்தின் சூட்டிங்கை நேராக போய் பார்த்திருக்கிறார் ரஹ்மான். அதில் தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு போனாராம் ஏ.ஆர்.ரஹ்மான். அதுவும் அடுத்த வெற்றிமாறனாகவும் மாறிய மாதிரியான ஒரு பிம்பத்தில் இருந்தாராம் தனுஷ். படம் வெற்றிமாறன் படம் மாதிரியேதான் இருக்கிறதாம். இதனாலேயே படத்திற்கான ரி ரிக்கார்டிங் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ரஹ்மான் கூறியிருக்கிறாராம்.
இதுவரை ரஹ்மான் எந்தப் படத்திற்கும் ரி ரிக்கார்டிங் செய்ததே இல்லையாம். படத்திற்கு மியூஸிக் போடுவதோடு சரியாம். மற்றபடி ரி ரிக்கார்டிங் பண்ண மாட்டாராம்.ஆனால் ராயன் படத்தை பொறுத்தவரைக்கும் படத்தின் மேக்கிங், கதை எல்லாம் ரஹ்மானுக்கு பிடித்துப் போக ரி ரிக்கார்டிங் நானே பண்ணுகிறேன் என சொல்லியிருக்கிறாராம்.
இதையும் படிங்க: அஜித் – ஆதிக் இணையும் படத்திற்கு வில்லனை செலக்ட் செய்த படக்குழு! போரடிக்காம இருந்தா சரி