ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த காதல் கடிதங்கள்.. மனைவி கேட்ட அந்த இரண்டே கேள்விகள்.. கைகூடிய திருமணம்..

இந்தியா சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவையும் தன் இசையால் கட்டிப்போட்டு வைத்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து ரோஜா படத்தின் மூலம் சினிமாவில் முதன்முதலாக இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான்.

அதுவரை கான இசையை கேட்டு வந்த நமக்கு ஒரு புதிய வித்தியாசமான இசையை நம் காதுகளுக்கு செவி சாய்த்தவர் ரகுமான். இளைஞர்களை ஒரு துள்ளல் இசையோடு பயணிக்க வைத்தவர்.

அவரின் இசை இன்று உலகமே வியந்து பார்க்கிற அளவுக்கு ஒரு பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து முதன் முதலில் ஆஸ்கார் விருதை வாங்கியவரும் ரகுமான் தான்.

இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக திகழும் ரகுமானை பற்றிய ஒரு ரகசியமான தகவலை அவருடைய சகோதரி ஒருவர் பகிர்ந்த ஒரு விஷயம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது ரோஜா படத்தில் பணியாற்றிய போதே ரகுமானுக்கு ஏகப்பட்ட காதல் கடிதங்கள் வந்ததாம் .ஆனால் அதை எல்லாம் அவருடைய சகோதரி கிழித்துப் போட்டு விடுவாராம் .அதிலிருந்து பயந்த அவரது குடும்பம் அவருக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்திரிந்தது. அப்பொழுதுதான் சாயிரா என்ற அவருடைய மனைவி அவருக்கு துணைவியாக மாறினார்.

ஆனால் பெண்பார்க்க போகும்போது அவருடைய மனைவி ரகுமானிடம் இரண்டே கேள்விகள் தான் கேட்டாராம் .ஒன்று அவருக்கு ஆங்கிலம் பேச தெரியுமா? என்று மற்றொன்று கார் ஓட்டுவீர்களா என்று. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டதற்குப் பிறகு ரகுமான் ஓரளவுக்கு தெரியும் என்று சொல்லியே அவருடைய திருமணம் நடந்ததாம்.

இதையும் படிங்க : பீட்டரை நான் கல்யாணமே பண்ணிக்கல!.. எனக்கு அவர் புருஷனும் இல்ல!.. கடுப்பான வனிதா விஜயகுமார்…

 

Related Articles

Next Story