தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமா அரங்கிலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை கொண்டிருப்பவர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜாவிடம் இருந்து வந்தவர் என்றாலும் ரஹ்மானுக்கு இருக்கிற அந்த பக்குவம் மரியாதை இளையராஜாவிடம் என்றுமே இருந்ததில்லை. இளையராஜாவை பற்றி பேசும் போதெல்லாம் அனைவரும் ரஹ்மானை ஒப்பிட்டே பேசி இருக்கிறார்கள்.
முதன்முதலில் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதை வென்ற நாயகனாக ரஹ்மான் இருந்தபோதிலும் அதை இப்போது வரை அவர் தலையில் என்றுமே ஏற்றிக் கொண்டதே இல்லை. மிகவும் எளிமையானவராகவும் மெதுவாக பேசுபவராகவுமே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ,வடிவேலு, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் திரைக்கு வெளிவர காத்துக் கொண்டிருக்கும் படம் மாமன்னன். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ரஹ்மான்.
அப்போது ரஹ்மான் மாரி செல்வராஜிடம் “நான் படத்தை பார்க்க வேண்டும். படத்தை பார்த்த பிறகு தான் அதற்கு ஏற்றார் போல கம்போஸ் பண்ண முடியும் “என கேட்டாராம்.
அந்த சமயத்தில் மாரி செல்வராஜ் வேற ஒரு படப்பிடிப்பிற்காக திருநெல்வேலியில் இருந்தாராம் .அதை ரஹ்மானிடம் சொல்ல “நான் சென்னைக்கு வருவதற்கு ஒன்றரை மாதங்கள் ஆகும். அதனால் சென்னையில் நீங்கள் பார்ப்பதற்கே நான் ஏற்பாடு செய்கிறேன்” என மாரிசெல்வராஜ் கூறினாராம்.
அதற்கு ரஹ்மான் “வேண்டாம், இந்தப் படத்தை நான் உங்களோடு சேர்ந்து தான் பார்க்க வேண்டும்” என கூறினாராம்.அதன் பிறகு ரஹ்மானை திருநெல்வேலிக்கு வரவழைத்து தியேட்டரில் ஒன்றாக இருவரும் படம் பார்த்தார்களாம். மேலும் அன்று ஒரு நாள் முழுவதும் மாரி செல்வராஜுடனேயே இருந்து நாள் முழுவதும் கழித்து விட்டு மறுநாள் தான் சென்னை சென்றாராம் ரஹ்மான். இதை ஒரு பேட்டியில் கூறிய மாரி செல்வராஜ் இந்த மாதிரி ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று கூறினார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…