யுவனை இசையமைப்பாளர் ஆக்கிய ஏ ஆர் ரஹ்மான்… யாரும் அறியாத டிவிஸ்ட் இதுதான்!!

by Arun Prasad |
யுவனை இசையமைப்பாளர் ஆக்கிய ஏ ஆர் ரஹ்மான்… யாரும் அறியாத டிவிஸ்ட் இதுதான்!!
X

பல இளைஞர்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போன இசை என்றால் அது யுவன் ஷங்கர் ராஜா இசைதான். 90ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான் யுவன் ஷங்கர் ராஜா, மிகவும் ரசிக்கத்தக்க பல பாடல்களை கொடுத்து ரசிகர்கள் பலரையும் மெய் மறக்கச்செய்தவர்.

“யுவன் குரலில் ஒரு ஈரம் இருக்கிறது” என ஏ ஆர் ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். தனது இசையைப்போலவே குரலாலும் பலரை கட்டிப்போடும் ஆற்றல் படைத்தவர் யுவன்.

மெலோடியில் இருந்து குத்துப்பாடல்கள் வரை பல வெரைட்டிகளில் தனது தனித்துவ முத்திரையை பதித்த யுவன் ஷங்கர் ராஜா, தான் இசையமைத்த முதல் திரைப்படமான “அரவிந்தன்” திரைப்படத்திலேயே வேற லெவலில் ஹிட் பாடல்களை தந்தார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹிட் ஆல்பம்களை கொடுத்துள்ளார் யுவன்.

செல்வராகவன்-யுவன், அமீர்-யுவன், விஷ்ணுவர்தன்-யுவன் ஆகிய காம்போக்கள் மிகவும் பிரபலமானவை. இன்று இருக்கும் இளைஞர்களையும் தனது இசையால் கோலோச்சிக்கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ரசிகர் போற்றும் இசையமைப்பாளராக ஆனதற்கு ஏ ஆர் ரஹ்மான்தான் காரணம் என்று கூறீனால் உங்களால் நம்பமுடிகிறதா?

அதாவது, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த முதல் படமான “ரோஜா” படத்தின் ஆல்பம் தாறுமாறான ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து பல இயக்குனர்கள் ஏ ஆர் ரஹ்மானை நோக்கி திரும்பினர்.

யுவன் ஷங்கர் ராஜா தொடக்கத்தில் விமான ஓட்டுநர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில்தான் இருந்தாராம். ஆனால் ஒரு நாள் அவரிடம் ஒரு உறவினர் வந்து “இனிமேல் உனது தந்தையின் (இளையராஜா) நிலை அவ்வளவுதான். இனி ஏ ஆர் ரஹ்மானின் ராஜ்ஜியம்தான்” என கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தையின் மரபு விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் இசையமைப்பாளராக ஆகவேண்டும் என முடிவெடுத்தாராம். இவ்வாறு யுவனின் இசைப்பயணத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் ஒரு மறைமுக காரணமாக இருந்திருக்கிறார்.

Next Story