More
Categories: Cinema News latest news

ஏ ஆர் ரஹ்மான் முக்கி முக்கி ம்யூசிக் போட்டும் அட்டர் ஃப்ளாப் ஆன திரைப்படங்கள்…

இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். “ஸ்லம்டாக் மில்லினியர்” திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார்களை வென்ற ரஹ்மான், ஆஸ்கார் மேடையிலேயே “எல்லா புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறியதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

Advertising
Advertising

என்ன தான் உலகமே போற்றும் இசையமைப்பாளராக இருந்தாலும், அவர் இசையமைத்த ஆல்பம் ஹிட் ஆகியிருந்தாலும், அத்திரைப்படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான். அத்திரைப்படத்தின் பாடல்கள் கூட காலப்போக்கில் மறந்துபோகும். சில நேரங்களில் அத்திரைப்படத்தின் பாடல்கள் மட்டும் கூட நிலைக்கலாம். ஆனால் படம் நிற்காது.

அவ்வாறு ஏ ஆர் ரஹ்மான் வெறித்தனமாக இசையமைத்து மண்ணை கவ்விய திரைப்படங்களை பார்க்கலாம்.

1.புதிய முகம்

ரேவதி, வினித் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்தது. “கண்ணுக்கு மை அழகு”, “நேற்று இல்லாத மாற்றம்” என பல ஹிட் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் படம் மொக்கை வாங்கியது.

  1. மே மாதம்

வினித், சோனாலி குல்கர்னி, மனோரமா ஆகியோர் நடித்த இத்திரைப்படம் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. “மின்னலே நீ வந்ததேனடி”, “என் மேல் விழுந்த மழைத்துளியே”, “மெட்ராஸை சுத்திபார்க்கப் போறேன்” போன்ற காலத்துக்கு அழியாத பாடல்களை உடைய இந்த காதல் திரைப்படம், மிகவும் மெதுவாக செல்லும் திரைக்கதையாலும் ரசிகர்களுக்கு ஒட்டாத பல காட்சிகளாலும் படு தோல்வி அடைந்தது.

  1. லவ் பேர்ட்ஸ்

பிரபு தேவா, நக்மா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கிய இத்திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது. “மலர்களே மலர்களே”, “நோ பிராப்ளம்” போன்ற ஹிட் பாடல்களை உடைய இத்திரைப்படம், மக்களிடையே வரவேற்பை பெற தவறியது. வடிவேலுவின் காமெடியும் சரியாக எடுபடவில்லை என்பதால் இத்திரைப்படம் தோல்வியை கண்டது.

  1. மிஸ்டர் ரோமியோ

“ரோமியோ ஆட்டம் போட்டால்” என்ற பிரபலமான பாடலை நாம் மறந்திருக்க முடியாது. அது போல் பல பாடல்கள் கொண்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படு மொக்கை வாங்கியது. பிரபு தேவா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை கே எஸ் ரவி என்பவர் இயக்கியிருந்தார்.

  1. இருவர்

பிரபல இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போதும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் சிறந்த மேக்கிங்கிற்காக இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் வெகுஜன மக்கள் இத்திரைப்படத்தின் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.

  1. தாஜ்மஹால்

பாரதி ராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் அவரது மகன் மனோஜ் நடித்திருந்தார். “திருப்பாச்சி அருவாள”, “ஈச்சி எழுமச்சி” போன்ற காலத்திற்கும் நிற்கும் பாடல்கள் நிறைந்த இத்திரைப்படம், ரசிகர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. திரைப்படத்தில் காட்டப்பட்ட எந்த காட்சிகளும் ஒட்டாமல் போக பாக்ஸ் ஆஃபீஸில் அதளபாதாளத்திற்கு சென்றது இத்திரைப்படம்.

  1. ராவணன்

மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் பல எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இத்திரைப்படம் மக்களை திரையரங்கை விட்டு ஓட வைத்தது. “காட்டுச் சிரிக்கி”, “உசுரே போகுதே” போன்ற டாப் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற இத்திரைப்படம் மொக்கையான திரைக்கதையால் மண்ணை கவ்வியது.

  1. கடல்

மறுபடியும் ஏ ஆர் ரஹ்மானை அழைத்த வந்த மணி ரத்னம் , மீண்டும் மக்களுக்கு சோதனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் கடல். “மூங்கில் தோட்டம்”, “நெஞ்சுக்குள்ளே” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் திணறிவிட்டது. போர் அடிக்கும் திரைக்கதையும் நடிகர்களின் ஒட்டாத நடிப்பும் இத்திரைப்படத்தை அதள பாதளத்தில் தள்ளியது.

  1. கோப்ரா

சமீபத்தில் பெறும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இத்திரைப்படம் குழப்பமான திரைக்கதையால் ரசிகர்களை சோதனைக்கு உள்ளாக்கியது. அனைத்து பாடல்களையும் தரமாக கொடுத்தார் ஏ ஆர் ரஹ்மான். ஆனால் திரைப்படமோ அதள பாதாளத்திற்கு சென்றது.

என்னதான் ஏ ஆர் ரஹ்மான் உயிரை கொடுத்து இசையமைத்திருந்தாலும், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல் படம் நன்றாக இருந்தால் தானே ஓடும்…

Published by
Arun Prasad

Recent Posts