இசைப்புயல் ஏஆர் ரஹ்மானையே வருத்தப்பட வைத்த வாய்ப்பு.. ஆஸ்கர் விருது வென்றும் இந்த நிலைமையா?

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற பிறகு தான் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்து வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
'ரோஜா' படத்தின் மூலம் கோலிவுட் என்ட்ரி கொடுத்து பின்னர் பாலிவுட் சினிமாவில் கோலோச்சி இந்தியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். பாலிவுட்டில் அவர் இசையமைப்பில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படம் ஹாலிவுட்டிலும் பிரபலமாக அவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்து, ஹாலிவுட்டிலிருந்து பல வாய்ப்புகளும் வந்தன. ஆனால், அவற்றை ஏற்கவில்லை என அவர் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏஆர் ரஹ்மான் பேசுகையில், "இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு உலகளவில் பிரபலமும் அங்கீகாரமும் கிடைபப்து என்பது எளிதல்ல. 'ஜெய் ஹோ' பாடல் எனக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கியது. இரண்டு ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தன. என் இசையை வெளிநாட்டினர் ரசித்து பாராட்டியது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது.

ஹாலிவுட் திரையுலகில் இருந்து அப்போது எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இந்தியாவில் என்னிடம் தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்தன, மேலும் எனக்கு ஓய்வும் தேவைப்பட்டதால் ஹாலிவுட் திரையுலக வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். ஆனால், தற்போது அந்த வாய்ப்புகளைத் தவறவிட்டதாகவே நினைக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டிருந்தால் உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கும்" என வருத்தப்பட்டு பேசினார். இத்தனை ஆண்டுகளுக்கு பின் ஹாலிவுட் வாய்ப்புகள் குறித்து ஏஆர் ரஹ்மான் வருத்தப்பட்டு பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, ஆஸ்கர் வென்ற அனுபவத்தைப் பற்றி பேசிய ஏஆர் ரஹ்மான், " ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் பின்னணி இசையை மூன்றே வாரங்களில் முடித்தேன். பொதுவாக 130 கீஸில் பாடல் அமைப்பேன். ஆனால், ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு 17 கீஸில்தான் பாடல் அமைத்தேன். அதைக் கேட்ட ஆஸ்கர் ஏஜெண்ட் வெகுவாக பாராட்டினார். அதன் பிறகு ஆஸ்கருக்கு அனுப்பினோம். 'ரோஜா' படத்தின் மூலம் நான் மக்களிடம் அடைந்த வரவேற்பைப் போலவே 'ஸ்லம்டாக் மில்லியனர்' படமும் எனக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது" என்று உணர்ச்சி பொங்க கூறியிருக்கிறார்.