இது நடக்கும் என நினைத்தேன்… கனத்த இதயத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு… எப்படி இருந்த மனுஷர்?

arrahman saira
AR Rahman Saira: பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா இரவு தங்களுடைய 29 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து தற்போது ஏ ஆர் ரகுமான் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டிருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ரசிகர்களுக்கு விவாகரத்து பதிவு தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முறையாக விவாகரத்து வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து ஜி.வி பிரகாஷ், நடிகர் ஜெயம் ரவி என விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையும் படிங்க: ARRahman: அவரை ‘நேசிக்கிறேன்’ ஆனாலும்… பிரிவதற்கான காரணத்தை அறிவித்த சாய்ரா
தற்போது இந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். இதுவரை ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றி பக்கத்தை மட்டுமே பார்த்து ரசிகர்கள் முதல்முறையாக அவர் வீட்டில் நடக்கும் பிரச்சனையை பதிவாக பார்க்கும் போது ரசிகர்களுக்கே அதிர்ச்சியான விஷயம்தான்.
1995ஆம் ஆண்டு தன்னுடைய அம்மா பார்த்து வைத்த பெண்ணான சாய்ரா பானுவைஎளிய முறையில் திருமணம் செய்து கொண்டார் ரஹ்மான். இவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சாய்ராவின் வக்கீல், திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு சாய்ரா தனது கணவர் ரஹ்மானைப் பிரியும் கடினமான முடிவை எடுத்திருக்கிறார். ஒருவரை இன்னொருவர் ஆழமாக நேசித்தாலும் சில சிரமங்களால் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதனால் வலி மிகுந்த இந்த சூழலுடன் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவணப்படம்னா உண்மையைச் சொல்லணும்… கோயம்பேடு ஆம்னி பஸ் மறந்துடுச்சா நயன்தாரா?
கடவுளுடைய கிரீடம் கூட உடைந்த இதயங்களால் தடுமாறும். இந்த தடுமாற்றத்தால் தவறிய இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும் அர்த்தத்தை கண்டு பிடித்துவிடலாம். உடைந்திருக்கும் நேரத்தில் என்னுடைய நண்பர்களுக்கு உங்களுடைய இரக்கத்துக்கும், எங்களுடைய தனியுரிமையை மதிப்பதற்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.