AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் அப்பா சேகர் மலையாளத்தில் இசையமைப்பாளராக இருந்தவர். திடீரென அவர் இறந்து போகவே குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ரஹ்மானுக்கு வந்தது.
இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு வாசிக்கும் வேலை செய்தார். ரோஜா படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார்., அதன்பின் தனது துள்ளலான இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: விவாகரத்துக்கு காரணம்!… சாய்ரா பானுவின் வழக்கறிஞர் சொல்வது என்ன?!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…
தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் கலக்கினார். சாய்ரா பானு என்பவரை 1995ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்தான், கணவர் ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு நேற்று இரவு திடீரென அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
எங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் பதட்டங்களும், சிரமங்களும் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி உள்ளதால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என அவர் கூறியிருந்தார்.

அதேபோல், ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ‘நாங்கள் முப்பதை தொடுவோம் என நினைத்தேன். ஆனால் எதிர்பார்க்காத விஷயம் நடந்துவிட்டது. உடைந்த இதயங்களால் கடவுளுடைய கிரீடம் கூட தடுமாறும். இந்த தடுமாற்றத்தால் தவறிய இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும் அர்த்தத்தை கண்டு பிடித்துவிட முயற்சி செய்கிறோம். உடைந்திருக்கும் நேரத்தில் என்னுடைய நண்பர்களுக்கு உங்களுடைய இரக்கத்துக்கும், எங்களுடைய தனியுரிமையை மதிப்பதற்கும் நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஹ்மானுக்கு அவரின் அம்மா பெண் தேடிய போது ரஹ்மான் 3 கண்டிஷன்கள் போட்டிருக்கிறார். எனக்கு மனைவியாக வரும் பெண் நன்றாக படித்திருக்க வேண்டும் மற்றும் அவருக்கு இசை அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். இரண்டாவது அந்த பெண் அழகாக இருக்க வேண்டும். மூன்றாவது அந்த பெண் அனைவரையும் மதிக்க கூடிய மரியாதை தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார். அப்படி ரஹ்மானுக்காக அவரின் அம்மா தேடிய பெண்தான் சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.
