பூனைக் குரலில் உருவான பாடலா அது? ஏஆர் ரஹ்மான் செய்த மேஜிக் - நைட் 12 மணிக்கு என்ன செய்தார் தெரியுமா?
AR Rahman: தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு அடுத்தபடியாக இசையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஏஆர்.ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏஆர் ரஹ்மானால் இந்தியாவிற்கு பெரும் பெருமை உண்டாகும் யாரும் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை.
முதன் முதலில் இந்தியாவில் இருந்து அதுவும் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்த ஒரு மாபெரும் கலைஞன் தான் ரஹ்மான். இளையராஜாவிடம் கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்தவர்தான் ரஹ்மான்.
இதையும் படிங்க: இழவு வீட்டுல என்ன ரொமான்ஸ்!.. தல தளபதி சலூனையே ஓவர்டேக் செய்த சந்தானம்.. பில்டப் டீசர் எப்படி இருக்கு?
முதல் படத்திலேயே பெரும் உயரத்தை அடைந்தார். ரோஜா படத்தில் அமைந்த பாடல்தான் இன்று வரை இளைஞர்கள்களின் காதலுக்கு தூதாக சென்று கொண்டிருக்கிறது. இத்தனை பெருமைமிக்க ரஹ்மான் எப்போதுமே இரவு நேரத்தில் தான் ரெக்கார்டிங்கே பண்ணுவாராம்.
இரவு நேரத்தில் அந்த அமைதியான சூழலில் பாடினால் தான் எதிர்பார்த்த ஃபீலிங் கிடைக்கும் என்பது ரஹ்மானின் நம்பிக்கை. அலைபாயுதே படத்தில் அமைந்த ‘யாரோ யாரோடி’ பாடல் வரிகளை வைரமுத்து எழுதிக் கொடுத்துவிட்டு போய்விட்டாராம்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு ஜப்பான் வருது!.. அடுத்து கார்த்தியை வம்பிழுப்போம்.. பக்காவா ரூட்டு போட்ட ப்ளூ சட்டை மாறன்!
முதலில் யாரோ யாரோடி உன்னோட புருஷன் என்ற வரியே இரண்டு முறை வருமாறு வைரமுத்து எழுதியிருந்தாராம். ஆனால் இது ரஹ்மானுக்கு ஏற்புடையதாக இல்லையாம். நைட் 12 மணியளவில் வைரமுத்துவுக்கு போன் செய்திருக்கிறார் ரஹ்மான்,
அப்போது நல்ல உறக்கத்தில் இருந்தாராம் வைரமுத்து. பின் அந்த வரியில் கொஞ்சம் மாற்றி எழுத கொடுக்க வேண்டும் என ரஹ்மான் கூற, மணி 12 ஆகுது. காலையில் வந்து எழுதிக் கொடுக்கிறேன் என வைரமுத்து சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: கம்பேக் கொடுக்கப் போறாரா கார்த்திக் சுப்புராஜ்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் தரமா இருக்கே!..
அதற்கு ரஹ்மான் ‘இல்ல சிங்கர்ஸ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பவே சொன்னால் நன்றாக இருக்கும்’ என 12மணிக்கு கேட்டாராம். அதன் பிறகு வைரமுத்து’சரி போனிலேயே சொல்கிறேன். எழுதிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு உன் திமிருக்கு அரசன் என மாற்றி எழுத சொல்லியிருக்கிறார் வைரமுத்து.
அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை கேட்கும் போது அந்த குரலின் வித்தியாசத்தை உணர்வீர்கள். முதலில் ரிக்கார்டு செய்யும் போது சாதாரணமாகத்தான் இருந்ததாம். பின் ரஹ்மான் ‘அப்படியே பூனை குரலில் பாடுங்கள் பாப்போம்’ என சொல்லியிருக்கிறார். அதனால் அந்த வரி ஆரம்பிக்கும் போதே பூனை கத்தினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பாடியிருப்பார்கள்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms