“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது.
குறிப்பாக “பொன்னி நதி பாக்கனுமே”, “தேவராளன் ஆட்டம்” போன்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் தற்போது வெளியாகவுள்ள இரண்டாம் பாகத்திலும் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் திரைப்படத்தின் பின்னணியில் ஒலித்த பாடலும் மிகவும் ரசிக்கப்பட்டது. முதல் பாகத்தில் குந்தவையும் நந்தினியும் சந்தித்துக்கொள்ளும்போது பின்னணியில் ஒலித்த “சாய சஞ்சலை” என்ற பாடலை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், இப்பாடல் உருவான விதம் குறித்து கூறியுள்ளார். அதாவது இப்பாடல் ஒரு தனிப்பாடல் அல்ல. குறிப்பிட்ட காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் பாடல். ஆதலால் இந்த பாடலே மக்களுக்கு புரியக்கூடாது என ஏ.ஆர்.ரஹ்மான் கூறிவிட்டாராம். இந்த பாடல் புரிந்துவிட்டால் இந்த காட்சியை பார்வையாளர்கள் கவனிக்க மாட்டார்கள் எனவும் கூறியிருக்கிறார்.
ஆதலால் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிப்பிரவாள நடையில் ஒரு பாடலை எழுதலாம் என முடிவெடுத்தாராம் இளங்கோ கிருஷ்ணன். இவ்வாறுதான் இப்பாடல் உருவாகியிருக்கிறது.
Surya 44:…
Ajithkumar: நடிகர்…
Viduthalai 2:…
சூர்யா அகரம்…
தமிழ் சினிமாவில்…