ARRahman: அவரை 'நேசிக்கிறேன்' ஆனாலும்... பிரிவதற்கான காரணத்தை அறிவித்த சாய்ரா

by sankaran v |   ( Updated:2024-11-19 12:43:13  )
ARRahman Sairabanu
X

ARRahman Sairabanu

ஏ.ஆர்.ரகுமானும், சாய்ரா பானுவும் 29 ஆண்டுகள் கழித்து திருமண வாழ்க்கையில் பிரிந்துள்ளனர். இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெரும் சோகம்

தங்களது 29 ஆண்டுகால இல்லற வாழ்வு முடிவுக்கு வருவதாக ஏஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு அறிவித்து இருக்கிறார். இது அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அறிக்கை

Also read: ARRahman: இசைப்புயல் குடும்பத்தில் ‘வீசியது’ புயல்… விவாகரத்தை அறிவித்தார் மனைவி!

சாய்ராவின் அறிக்கையினை பார்க்கும்போது இது நேற்று இன்று எடுத்த முடிவல்ல. நீண்ட காலமாக முடிவு செய்து பின்னர் அறிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து கடுகளவும் வெளியே தெரியாமல், காட்டி கொள்ளாமல் இத்தனை நாட்கள் இருவரும் இருந்ததை எண்ணி ரசிகர்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.

மன உளைச்சல்

இந்த நிலையில் விவகாரத்திற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சாய்ரா, 'தங்களது உறவில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த முடிவினை எடுத்து இருப்பதாகவும், ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தாலும் பதட்டங்களும், சிரமங்களும் தங்களுக்கு இடையே தீராத இடைவெளியை உருவாக்கி உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

மிகப்பெரும் அதிர்வலை

ஒருவர் நலனில் மற்றவர் மிகுந்த அக்கறை கொண்டு, பலருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த இந்த ஜோடி பிரிவது இந்திய திரையுலகில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும் இது அவர்களின் தனிப்பட்ட முடிவு எனவே இதை அப்படியே நாமும் கடந்து செல்வது தான் நம்முடைய இதயத்திற்கு நல்லது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

Next Story