நெல்சன் இயக்கிய ஜெயிலர் படமும் சுமார் மூஞ்சு குமார் படம் தான். ஆனால், ரஜினிகாந்துக்கு பிஜிஎம்மில் மாஸ் எலிவேஷன் கொடுத்து அந்த படத்தை ஓட வைத்ததே அனிருத் தான். இதை ரஜினிகாந்தே ஜெயிலர் வெற்றி விழாவில் சொல்லியிருப்பார்.
ஆனால், லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரம் வெயிட்டாக எழுதப்பட்ட நிலையிலும், ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை மற்றும் பாடல்கள் என இரண்டிலுமே பிரம்மாதப்படுத்தாமல் ஏதோ கடமைக்கு காசு வாங்காமல் வேலை பார்த்தவர் போல இசையமைத்திருக்கிறார் என ரசிகர்கள் குறை சொல்லி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…
ஜலாலி பாடல் மற்றும் தேர் திருவிழா பாடல்கள் மட்டுமே ஓகே ரகமாக இருந்ததே தவிர ஏ.ஆர். ரஹ்மான் ரேஞ்சுக்கெல்லாம் இந்த பாடல்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே அவர் இயக்கிய முதல் படமான ‘3’ படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் எல்லாமே மிகப்பெரியளவில் சென்ஷேனலாக உலகளவில் பிரபலமானது. ஆனால், அனிருத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதறியதில் இருந்தே அவரது படங்களில் இசை பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை.
இதையும் படிங்க: வாரிசு நடிகரை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கும் சமந்தா?… யார் என்பதுதான் ஹைலைட்டே..!
இந்த ஆண்டு இதுவரை அனிருத் இசையில் எந்தவொரு படங்களும் வெளியாகவில்லை. ஆனால், பொங்கலுக்கு அயலான் படமும் பிப்ரவரியில் லால் சலாமும் வெளியாகி உள்ளன. எந்திரன் படத்துக்கு போட்ட ட்யூனில் மிச்சம் இருந்த ட்யூனை வைத்து அயலான் படத்தை ஓட்டினார் என கடுமையாக ரஹ்மான் விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த படத்திலும் அதே விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொன்னியின் செல்வன் படங்களிலும் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…