ஏஆர்.ரகுமான், சாய்ரா பானு விவாகரத்து விவகாரத்தில் அவரைப் பற்றிய தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து அவரது இசைக்குழுவில் உள்ள மோகினிடே என்ற பெண்ணும் விவாகரத்து செய்துள்ளார். இதையும் தொடர்பு படுத்திப் பேசப்படுகிறது.
மேலும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு, ஜீவனாம்சம் அப்படி இப்படின்னு ஆளாளுக்கு ஒரு கதை அளக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா ஏ.ஆர்.ரகுமான் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர்னு அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால் மட்டும் தான் சொல்ல முடியும். அந்தவகையில் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் ஒரு புதுத்தகவலை தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
மூத்த மகள்

மூத்த மகள் கதீஜா சுவிட்சர்லாந்துல படிச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்க சென்னைக்கு வரப் போறாங்க. அவங்ககிட்ட கூட ஏ.ஆர்.ரகுமான் சொன்னது இதுதான். அம்மா வந்து மும்பைல இருக்காங்க. அவங்க என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியல. அவங்களுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுங்கன்னு சொல்லிருக்காரு. இவங்களுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சனை. அவங்க பிரியறதா இருந்தா சொல்லாம கூட பிரிஞ்சி இருக்கலாம்.
எப்பேர்ப்பட்ட மனிதர்
Also read: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான ஆண் போட்டியாளர்!… அப்ப இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?!…
ஆனா ஏதோ ஒரு ஆத்திரத்துல அறிவிச்சிட்டாங்க. இது மாறும்னு ரகுமான் நினைக்கிறாரு. அந்த அளவுக்கு அவர் அதைக்கூட பெருந்தன்மையா எடுத்துக்குறாரு. சரி. அவள் கோபப்படுறா. இது மாறும்னு நினைக்கிறாரு. அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செஞ்சிக் கொடுங்க மகள்கிட்ட சொல்லிருக்கான்னா அவர் எப்பேர்ப்பட்ட மனிதரா இருப்பாரு?
ஏ.ஆர்.ரகுமானைப் பொருத்தவரை தான் உண்டு. தன் வேலை உண்டுன்னு இருக்குறவர். அவரை மாதிரி ஆளு உலகத்துலயே கிடையாது. சினிமா உலகில் இப்படி ஒருவர் இருக்க முடியுமான்னு ஆச்சரியமா இருக்கும்.
தொழிலைத் தெய்வமா நினைக்கிறவரு
அவரு ஸ்டூடியோவுக்கு வர்ற நபர் எப்படி இருக்கணும்னு டிரஸ் முதற்கொண்டு யோசிப்பாராம். ஒருமுறை மும்பையில் இருந்து ஒரு பாடகி சாட்ஸ் போட்டுவிட்டு வந்தாங்களாம். அவரை அப்படியே அனுப்பிருங்கன்னு திருப்பி விட்டாராம். அந்தப் பாட்டையே அவங்களுக்குக் கொடுக்கலை. தொழிலைத் தெய்வமா நினைக்கிறவரு. திரையில் வேணும்னா கன்னா பின்னான்னு அவுத்துப் போட்டுட்டு ஆடுவாங்க. ஆனா பாடுகிற இடம் அப்படி இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
தனிமை
அந்தளவுக்கு இருக்குற அவர் தொழில்மேல பக்தியா இருக்காரு. இசையில் அவரோட அர்ப்பணிப்பு வேணா குடும்பத்துல பிரச்சனையா இருக்கலாம். அவர் குடும்பத்தோட செலவழிக்க நேரமில்லை. எப்பவுமே இசை இசைன்னு ஓடிக்கிட்டே இருக்காரு. தனிமையா நாம இருக்கோமே என்ற வருத்தமாகத் தான் இருக்கும்.
ஜீவனாம்சம், கள்ளக்காதல்
Also read: கோலிவுட்டின் நெப்போடிஸ குடும்பமே இவங்கதான்… நீங்களாம் பேசலாமா?
இல்லன்னா இப்படிப்பட்ட ஒரு முடிவை அவங்க எடுக்க அவசியமே இல்லை. நான் விசாரித்த வரைக்கும் அது தான் உண்மையா இருக்கு. இதைத்தாண்டி ஜீவனாம்சம் அது இதுன்னு எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது. கள்ளக்காதல்னு சொல்றாங்க. கேட்குறதுக்கே அருவருப்பா இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
