மாமன்னன் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த துணிகர காரியம்? என்ன மனிஷன்யா!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இத்திரைப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் சாதிய ஏற்றத்தாழ்வை கடுமையாக சாடிய வண்ணம் அமைந்திருந்தது. ஆதலால் இந்த இரு திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு பக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனை தொடர்ந்து “மாமன்னன்” திரைப்படமும் அதே பாணியில் அமையவுள்ளதாக தெரிய வருகிறது.
மாரி செல்வராஜ் இதற்கு முன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன்தான் பணியாற்றியிருக்கிறார். முதன்முதலாக “மாமன்னன்” மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்துள்ளார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக வடிவேலு பாடிய “ராசா கண்ணு’ பாடல் பலரின் இதயங்களையும் உருகச்செய்தது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானை இத்திரைப்படத்தில் இசையமைக்க வைப்பதற்காக அணுகியிருக்கிறார் மாரி செல்வராஜ். அப்போது மிகவும் தயங்கியபடியே முழு கதையையும் கூறினாராம். மாரி செல்வராஜ் கூறிய கதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். உடனே ரெக்கார்டிங் வைத்துக்கொள்ளலாம் என கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த படத்திற்காக நான் சம்பளத்தை குறைத்துக்கொள்ள கூட தயாராக இருக்கிறேன்” என கூறினாராம்.