Connect with us

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏஆர் ரகுமானுக்கு வைத்த செக்…! பாடலாசிரியரை சீண்டியதால் ஏற்பட்ட வினை…

ps_main_cine

Cinema News

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏஆர் ரகுமானுக்கு வைத்த செக்…! பாடலாசிரியரை சீண்டியதால் ஏற்பட்ட வினை…

மணிரத்தினம் இயக்கத்தில் பெரிய காப்பியமான பொன்னியின் செல்வன் படம் வருகிற 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.

ps1_cine

இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். கமல், ரஜினி போன்றோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமே ஏஆர்.ரகுமானின் இசைதான்.

இதையும் படிங்கள் : சூர்யாவை ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு!…வெளியான சூர்யா 42 மோஷன் போஸ்டர் வீடியோ…

ps2_cine

அதிலும் பொன்னி நதி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணண் என்ற ஒரு இலக்கியவாதி எழுதியுள்ளார். இவர் ஜெயமோகனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அதன் மூலமே இந்த படத்திற்காக பாடலை எழுதியுள்ளார்.

ps3_cine

இந்த பாடல் எழுதுவதற்கு முன் ஏஆர்.ரகுமானிடம் மணிரத்தினம் இளங்கோ கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைக்க ரகுமான் இளங்கோ கிருஷ்ணனிடம் பாடல் எழுதுவது சரி, இலக்கியமாக இருக்கக் கூடாது. கவிதையாக மட்டுமே இருக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவர் அந்த பாடலை எழுதி முடித்ததும் இதை ஏஆர்.ரகுமான் குரலில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என கூறினாராம் இளங்கோ. அதன் படியே இந்த பாடல் அமைந்தது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top