AR Rahman: தமிழ் சினிமா அதுவரை கேட்காத ஒரு இசை. 1992 ஆம் ஆண்டு தமிழ் நாடே பார்த்து பரவசமடைந்த ஒரு பாடல் ‘சின்ன சின்ன ஆசை’. இப்படியும் ஒரு இசையில் இந்தமாதிரி ஒரு பாடலா என ஆச்சரியப்பட வைத்த ஒரு கலைஞன் தான் ஏஆர் ரஹ்மான்.
ரோஜா படத்தின் மூலம் முதன் முதலில் தன்னை இந்த சினிமாவிற்கு அறிமுகப்படுத்துகிறார் ரஹ்மான். அதுவரைக்கும் அப்படி ஒரு ஓப்பனிங் சாங்கை சினிமா பார்த்ததே இல்லை. டைட்டில் கார்டு முடிந்ததும் கிராமத்து மண்வாசனையுடன் அருவிகளில் இருந்து நீர் கொட்ட பாடல் துவங்குகிறது இந்த சின்ன சின்ன ஆசை.
இதையும் படிங்க: விட்டா வில்லனில் சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிடுவாரு போலயே… எஸ்.ஜே.சூர்யா படத்தின் மாஸ் அப்டேட்…
இப்படித்தான் அந்தப் படமே ஆரம்பமாகிறது. ரோஜா படம் ஹிட்டாவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததும் ரஹ்மான் இசையில் அமைந்த பாடல்கள்தான். ஒரே பாட்டு ஓஹோனு வாழ்க்கை என சொல்வார்கள். அப்படித்தான் ரஹ்மான் வாழ்க்கையிலும் நடந்தது.
அந்த ஒரு பாடல் மற்றும் படம். ரஹ்மான் உயர்ந்து கொண்டே போனார். சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்ப அவர் காலடி எடுத்துவைத்த எல்லாமே வெற்றிகளாக அமைந்தன. இந்த நிலையில் ரஹ்மானை ஒரு சமயம் பார்க்கும் வாய்ப்பு ஆர்.ஜே. பாலாஜிக்கு கிடைத்ததாம்.
இதையும் படிங்க: கெஸ்ட் ரோல்னு சொல்லி இப்படி ஏமாத்திட்டீங்களே!.. லால்சலாம் பாத்துட்டு பொங்கும் ரசிகர்கள்….
அந்த நேரம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது ரஹ்மான் ‘ நான் மைக்கேல் ஜாக்சனை சந்திக்க ஆசைப்பட்டேன். இது மைக்கேல் ஜாக்சனுக்கு தெரிந்ததும் அதற்கு மைக்கேல் நீ ஆஸ்காரில் தேர்வு அல்லது நாமினேட் எதுவாக இருந்தாலும் அதன் பிறகு உன்னை நான் சந்திக்கிறேன்’ என கூறினாராம்.
அவர் சொன்னதைப் போலவே இரண்டு ஆஸ்கார் விருதுக்கு சொந்தக்காரராக மாறினார் ரஹ்மான். உடனே மைக்கேலின் ஏஜெண்டிடம் இருந்து ‘மைக்கேல் ஜாக்சன் உங்களை சந்திக்க விரும்புகிறார்’ என்ற குறுஞ்செய்தி வந்ததாம். போய் பார்த்தாராம் ரஹ்மான். ஆனால் மைக்கேலுடன் இருக்கும் மாதிரியான ஒரு புகைப்படம் கூட ரஹ்மானிடம் இல்லையாம்.
இதையும் படிங்க: படத்தை பார்த்துட்டு லவ் பண்ணலாமா? வேணாமான்னு முடிவு பண்ணுங்க!.. லவ்வர் விமர்சனம்!..
இது ஒரு செரிஸ் மூமண்ட் என கூறி மகிழ்ந்தாராம் ரஹ்மான். உடனே பாலாஜி இதையெல்லாம் கேட்டுவிட்டு ரஹ்மானிடம் இருந்து விடை பெற ‘ஒரு போட்டோ கூட எடுக்கவில்லையே? அதற்குள் கிளம்புகிறீர்களா?’ என ரஹ்மான் பாலாஜியை பார்த்து கேட்க அதற்கு பாலாஜி ‘எனக்கு இது ஒரு மைக்கேல் ஜாக்சன் மூமண்ட்’ என வந்துவிட்டாராம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…