அந்த பாட்டை எழுதினது வைரமுத்து இல்ல!.. ஏ.ஆர்.ரஹ்மானாம்!.. என்னப்பா சொல்றீங்க!...

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் அப்பா சேகர் மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அப்பா மறைவானதால் சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை சுமந்த ரஹ்மான் சினிமாவில் இசையமைக்க துவங்கினார்.

ரஹ்மானின் புதிய இசை, புதிய ஒலி ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. ரோஜா, ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் என அதிரடி காட்டினார். இவரின் இசை இளசுகளை கட்டிப்போட்டது. ரஹ்மான் இசையமைத்தாலே ஆடியோ கேசட்டுகள் அதிக விற்பனை ஆகியது. இசைப்புயல் என்கிற அடைமொழியும் அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: விக்ரமுடன் அஜித் நடிக்க வேண்டிய படம்!.. மிஸ் ஆனது இதனால்தான்!.. இயக்குனர் சொன்ன சீக்ரெட்!..

சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு., ஒரு பாடலுக்கான முதல் வரியை பெரும்பாலும் இசையமைப்பாளர்களே எழுதி விடுவார்கள். படத்தில் எந்த சூழ்நிலையில் அந்த பாடல் வருகிறது என இயக்குனர் சொன்னதும், இசையமைப்பாளர் ஒரு மெட்டை போடுவார். அது இயக்குனருக்கு பிடித்துவிட்டால் இசையமைப்பாளர் ஒரு டம்மி வரியை போட்டு அந்த பாடலை பாடி பார்ப்பார்.

சில சமயம் அந்த வரிகளே இயக்குனர்களுக்கு பிடித்துவிடும். அதன்பின் மற்ற வரிகளை பாடலாசிரியர் எழுதுவார். இசைஞானி இளையராஜா இசையில் உருவான பல பாடல்களில் முதல் வரி அவர் சொன்னதுதான். சில சமயம் முதல் வரியை பாடலாசிரியர் எழுதியிருந்தாலும் இளையராஜா அதை திருத்திவிடுவார்.

இதையும் படிங்க: அட்டகாசமாக உருவாகி வரும் கங்குவா!.. கதையே சும்மா மிரட்டலே இருக்கே!.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

இதய கோவில் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை ‘ஆடிடும் தென்னம் கீற்று’ என்றுதான் பாடலாசிரியர் எழுதி இருந்தார். அதை ‘இதயம் ஒரு கோவில்’ என மாற்றியது இளையராஜாதான். வரிகளில் மாற்றம் சொன்னதால்தான் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே மோதலே எழுந்தது.

அதேபோல், ஜோடி படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அடுத்தநாள் படப்பிடிப்பு நடக்கவேண்டிய நிலையில் அவசரமாக ஒரு பாடலை உருவாக்க வேண்டியிருந்தது. வைரமுத்து பாடல் வரிகளை எழுதினார். ஆனால், முதல் வரியில் ரஹ்மானுக்கு திருப்தி இல்லை. அவர்தான் ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’ என எழுதியிருக்கிறார். அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

 

Related Articles

Next Story