தமிழ் சினிமா அவங்கக்கிட்ட நியாயமா நடந்துக்கல! – பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏ.ஆர் ரகுமான் செய்த காரியம்..

by Rajkumar |   ( Updated:2023-03-12 11:39:53  )
தமிழ் சினிமா அவங்கக்கிட்ட நியாயமா நடந்துக்கல! – பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏ.ஆர் ரகுமான் செய்த காரியம்..
X

ar rahman

தமிழில் பல படங்களில் டாப் ஹிட் பாடல்களை கொடுத்து ஹாலிவுட் வரை பிரபலமாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தொடர்ந்து ஹிட் பாடல்களாகவே கொடுத்து வருகிறார். தற்சமயம் பத்து தல படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்துள்ளார்.

ar rahman

தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்கள் அதிக சம்பளம் வாங்கினாலும் அதில் பணிப்புரியும் சின்ன சின்ன ஊழியர்கள் இன்னமும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் திரைப்பட சங்கங்கள் இவர்களுக்கு பெரிதாக உதவுவதில்லை. முக்கியமாக லைட் மேன் பணிப்புரியும் பலரும் உயிரையும் பணயம் வைத்து பணிப்புரிகின்றனர்.

லைட் மேன் தொழிலாளர்களோடு நட்பாக இருப்பவர் ஏ.ஆர் ரகுமான். ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் ஏ.ஆர் ரகுமான் இருக்கும்போது அவரது மகனின் பிறந்த நாளை அங்கு கொண்டாட திட்டமிடப்பட்டது. அப்போது அவருடன் பழகிய லைட் மேன்கள் அங்கு இருந்தனர். அவர்கள் முன்னிலையில்தான் அந்த பிறந்தநாள் விழா நடந்தது.

AR Rahman

நியாயமாக அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை:

அதன் பிறகு நான்கு நாள் கழித்து அந்த லைட் மேன் பணிப்புரிபவர்களில் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் விபத்துக்குள்ளாகி இறந்தார் என்கிற செய்தியை ஏ.ஆர் ரகுமான் கேள்விப்பட்டார். இதுக்குறித்து அவர் கூறும்போது தமிழ் சினிமா அவர்களுக்கு நியாயமாக செய்ய வேண்டிய எதையுமே செய்யவில்லை. உயிரை பணயம் வைத்து பணிப்புரியும் அவர்களுக்கு ஒரு மருத்துவ காப்பீடு கூட செய்வதில்லை.

ரகுமான் நடத்தும் இசை நிகழ்ச்சி:

மாதத்திற்கு இரண்டு லைட் மேன்கள் இப்படியாக விபத்துக்குள்ளாகி உடல் உறுப்புகளை இழக்கின்றனர் அல்லது இறக்கின்றனர் என அவர் கூறியிருந்தார். மேலும் இவர்களுக்கு உதவும் வகையில் சூஃபி என்னும் இசை கச்சேரியை வருகிற மார்ச் 19 ஆம் தேதி சென்னையில் நடத்த உள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

sufi concert poster

இதில் வருகிற தொகையை கொண்டு இந்த லைட் மேன் பணிப்புரியும் நபர்களுக்கு உதவி புரிவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

Next Story