அரபிக்குத்து என்னோட பாட்டு இல்ல...! உண்மையை பொசுக்குன்னு சொன்ன சிவகார்த்திகேயன்...
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஏகப்பட்ட விமர்சனங்களோடு வந்த படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெஹ்டே நடித்திருந்தார். யோகிபாபு, விடிவி.கணேஷ் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
படம் பார்த்த அனைவரும் இயக்குனர் நெல்சனை விளாசி வந்தனர். விஜய்யை வைச்சு நல்லா சென்சிருக்கார்னு திட்டி தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். சொல்லப்போனால் நெல்சன் விஜய் ரசிகர்களிடம் மாட்டிருந்தா என்ன ஆயிருப்பார்னு தெரியாது அந்த அளவுக்கு கொதித்து போயிருந்தனர்.
படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி அந்த இரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.அனிருத் இசையில் வந்த அந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அரபிக்குத்து பாடல் செம ரீச் ஆனது.
அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிர்ந்தார் என்று நினைத்துக் கொண்டிருக்க அண்மையில் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் உண்மையில் அந்த பாட்டை நான் எழுதவில்லை, அனிருத் சில அரபி வார்த்தைகள் எல்லாம் சேர்த்து ஃபுல்லா பாடி எனக்கு அனுப்பியிருந்தார். அதை கேட்டு சில வார்த்தைகளை மட்டும் நீக்கி தமிழ் வார்த்தைகள் சிலவற்றை சேர்த்தேன் மத்தபடி இது அவருடைய பாட்டுதான்
என கூறியிருந்தார்.