மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..

அறம் எனும் தரமான படத்தை கொடுத்து நயன்தாராவை நிஜமாவே லேடி சூப்பர்ஸ்டாராக மாற்றிய கோபி நயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கருப்பர் படம் உருவாகி உள்ளது. அதன் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஜெய் தொடர்ந்து உரிமை குரலை எழுப்பும் படங்களை தேர்வு செய்து நடித்து வருவது நிஜமாகவே பாராட்ட வைக்கிறது. அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள லேபில் வெப்சீரிஸ் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இதையும் படிங்க: அந்த டைரக்டர் என்னை தூங்கவே விடவில்லை!.. பல வருடம் கழித்து திரிஷா சொன்ன சீக்ரெட்..

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கருப்பர் நகரம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஆரம்பமே அசத்தலாக எம்ஜிஆரின் “மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா” என்கிற பாடல் வரிகளுடன் இடம்பெற்றுள்ள டீசர் ரசிகர்களை பார்த்த நொடியிலேயே படத்தை பார்க்கத் தூண்டுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படமே இவருடைய கதையை திருடி தான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியதாக சர்ச்சை வெடித்தது. அப்போது நம்பாதவர்கள் கூட இவர் லோ பட்ஜெட்டில் அறம் எனும் தரமான படத்தை இயக்கிய நிலையில், அனைவரும் அதனை நம்பினர்.

இதையும் படிங்க: குறுக்கே வந்த நடிகர்!.. எம்.ஜி.ஆர் நடிக்க பயந்த அந்த படம்!… ஆனால் நடந்ததே வேற!…

இந்நிலையில், அடுத்த படைப்பாக கருப்பர் நகரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். டீசரின் ஒவ்வொரு காட்சிகளும் நடிகர்களின் உணர்ச்சிகளும் ரொம்பவே இயல்பாக ஒன்றிப் போயுள்ளது. உலகம் முழுவதும் ஒரே பிரச்சனை தான் என்றும் முதலாளித்துவம் மற்றும் ஆதிக்க எண்ணத்திற்கு எதிரான சாட்டையடியாக இந்த படத்தை கோபி நயினார் உருவாக்கி இருப்பது தெளிவாக தெரிகிறது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it