Cinema News
அரண்மனை 4, மகாராஜா ரெண்டுமே 100 கோடி வசூல் பண்ணல!.. மனசாட்சியோடு உருட்டுங்கப்பா!..
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒரு விஷயத்தை விடாமல் செய்து வருகிறார்கள். ஒரு படம் நன்றாக தியேட்டர்களில் ஓடுகிறது என்றாலே இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என பொய்யான செய்திகளை சிலர் பரப்பி விடுகிறார்கள். ஊடகங்களும் சரியாக விசாரிக்காமல் அதை அப்படியே செய்திகளாக வெளியிடுகின்றனர்.
இந்த வதந்தியை இரண்டு வகையானவர்கள் பரப்புகிறார்கள். முதலில் ரசிகர்கள். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், ரிலீஸ் ஆன முதல் நாளே 100 கோடி வசூல் என அவர்களே டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அடித்துவிடுகிறார்கள். உண்மையில் வசூல் 30 கோடியாக மட்டுமே இருக்கும்.
இதையும் படிங்க: தொடர்ந்து 10 மணி நேரம் விஜயால் எப்படி நிற்க முடிந்தது? காரணத்தை சொன்ன தயாரிப்பாளர்
ரிலீஸ் ஆகி 2 நாளில் 2 கோடி என பதிவிடுகிறார்கள். ஒரு வாரம் ஆகிவிட்டால் 500 கோடியை தாண்டிவிட்டது என்கிறார்கள். ஆனால், உண்மையான வசூல் என்ன என்பது தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் மட்டுமே தெரியும். ஒருபக்கம், ரசிகர்கள் சொல்வது பொய் என்பது அப்படத்தின் தயாரிப்பாளருக்கு தெரியும் என்றாலும் மறுத்து எதையும் சொல்ல மாட்டார். ஏனெனில், அது படத்தின் விளம்பரத்துக்கு உதவும் என்றே நினைப்பார்.
இன்னொரு பக்கம் டிவிட்டரில் நிறைய ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் சிலர் டிராக்கர்ஸ் என்கிற பெயரில் போலியான தகவல்களை பரப்புவார்கள். தயாரிப்பாளர்களே பணம் கொடுத்து அப்படி பொய்யான செய்தியை பரப்ப சொல்வதாகவும் சொல்வதுண்டு. சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரணமனை 4 கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் 100 கோடி வசூல் செய்ததாக சிலர் சொன்னார்கள்.
இதையும் படிங்க: பாகுபலி, ஆர்ஆர்ஆர், ஜவான் வரிசையில் சாதனை படைத்த கல்கி! இவ்ளோ கோடி போட்டு எடுத்து இது இல்லைனா எப்படி?
அதேபோல், விஜய் சேதுபதியின் நடிப்பில் மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியானது. இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,இந்த படம் அரண்மனை 4 படத்தின் வசூலை தாண்டிவிட்டதாகவும் சில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டது. ஆனால், உண்மையில் இந்த இரண்டுப் படங்களும் 100 கோடி வசூல் செய்யவில்லை என்றே விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் இந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்து ‘அரண்மனை 4, மகாராஜா இரண்டுமே 100 கோடி வசூல் இல்லை. மனசாட்சியோட உருட்டுங்கய்யா’ என பதிவிட்டிருக்கிறார்.