தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மற்றும் ஹரிக்கு போட்டியாக மூன்று பாகங்களை கடந்து நான்காவது பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். அரண்மனை முதல் பாகம் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சுந்தர் சி, சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.

அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா, திரிஷா, பூனம் பஜ்வா, சித்தார்த், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரண்மனை இரண்டாம் பாகமும் ஓரளவுக்கு ஓடியது. ஆனால், கடைசியாக ஆர்யா, ராஷி கன்னா, விவேக், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ஊத்தி மூடிய அஜித்தின் ரீ ரிலீஸ் படங்கள்!.. ‘தல’ ஆட்டம் ஒரு நாள் கூட தாண்டலையே பாஸ்!..

இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், இன்று வெளியான படம் ரசிகர்களை கவரும்படி உள்ளதாகவும் சுந்தர் சி கம்பேக் என்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்கள் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘பில்லா’ படத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்! 16 வருஷம் கழிச்சு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

அரண்மனை 4 டெக்னிக்கல் ஆகவும், காமெடி, ஹாரர், விஷுவல், இடைவேளைக்கு முந்தைய காட்சி மற்றும் கடைசி கிளைமாக்ஸுக்கு முன்பாக 40 நிமிடங்கள் படம் தீயாக இருப்பதாக படத்தை பார்த்த மற்ற ஊர் ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.  அரண்மனை 4 திரைப்படம் சிறப்பாக இருக்காது என பலரும் நினைத்து வந்த நிலையில், அதற்கு மாறாக கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

கிளைமேக்ஸில் தமன்னா மற்றும் ராஷி கன்னா நடனம் ஆடும் “அச்சச்சோ” பாடல் வரை மக்கள் கூட்டமாக இருந்து பார்த்து ரசித்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: குழந்தைகளை வளர்ப்பதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா? டிப்ஸ்களை அள்ளி வீசிய சின்னக் கலைவாரணர்!..

https://twitter.com/antoviews/status/1786232109688136029