அம்மாம் பெரிய ‘லேடி சூப்பர் ஸ்டாரே’ வேண்டானு சொல்லும் போது.. அறந்தாங்கி நிஷா எடுத்த திடீர் முடிவு

nisha
விஜய் டிவியில் இருந்து ஏராளமான பிரபலங்கள் என்று லைம லைட்டில் ஜொலித்து வருகின்றனர். அதில் குறிப்பாக அறந்தாங்கி நிஷா கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்து கொண்டு ஒரு சிங்கப்பெண்மணியாக அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை எல்லாம் எதிர்த்து போராடி இன்று விஜய் டிவியின் தொகுப்பாளினியாகவே மாறி இருக்கிறார் அறந்தாங்கி நிஷா.
ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அறந்தாங்கி நிஷா இன்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆகச் சிறந்த தொகுப்பாளினியாக மாறி இருக்கிறார். தொகுப்பாளினி என்றாலே அழகு, நிறம், சரளமாக பேசக்கூடிய ஆங்கிலம் இது மட்டும்தான் முக்கியம் என்பதை முற்றிலுமாக மாற்றி அமைத்த ஒரு பெண் தான் அறந்தாங்கி நிஷா.
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அதன் மூலம் அவருக்கு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் தொடர்ந்து கிடைத்தது. கோலமாவு கோகிலா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அறந்தாங்கி நிஷா.
சமீபத்தில் தான் சென்னையில் சொந்த வீடு ஒன்றை வாங்கி பால் காய்ச்சி இருப்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகை என்பதாலும் மதத்தை காரணம் காட்டியும் வீடு கொடுக்கவே தயங்கினார்களாம். அதனால் எப்படியாவது சம்பாதித்து சென்னையில் புதியதாக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார் அறந்தாங்கி நிஷா.
ஏற்கனவே மணிமேகலை, கே பி ஒய் சரத் ஆகியோர் வீடு வாங்கிய நிலையில் இவர்கள் வரிசையில் இப்போது அறந்தாங்கி நிஷாவும் இணைந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெள்ளம், புயல் காலங்களில் களத்தில் இறங்கி வேலையும் செய்து இருக்கிறார் .கே பி ஒய் பாலா இன்று வரை மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு என்னெல்லாம் உதவி செய்து வருகிறாரோ அதைப்போல அறந்தாங்கி நிஷாவும் தன்னால் இயன்ற அளவு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரை சின்னத்திரை நயன்தாரா என்றுதான் பலரும் அழைத்து வந்தனர். இனிமேல் என்னை யாரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்க வேண்டாம் என மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறார் அறந்தாங்கி நிஷா. ஏற்கனவே தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என நயன்தாரா கூறிய நிலையில் அறந்தாங்கி நிஷா என்னை சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்.