Connect with us
swamy

Cinema News

இத்தனை ஆயிரம் கோடி சொத்தா?!.. விபத்தில் சிக்கியும் சாதித்து காட்டிய அரவிந்த் சாமி!..

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதன்பின் அவரின் இயக்கத்தில் ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ‘எனக்கு அரவிந்த் சாமி போல புருஷன் வேணும்’ என பெண்கள் சொல்லுமளவுக்கு அவர்களின் மனதில் இடம் பிடித்தார்.

swamy

சினிமாவை தாண்டி அரவிந்தசாமி சிறந்த தொழிலதிபரும் கூட. நடிப்பு என்பது அவரின் விருப்பம் மட்டுமே. திருமணத்திற்கு பின் குடும்பத்தில் சில பிரச்சனை ஏற்பட்டு மனைவியை பிரிந்தார். ஆனாலும், குழந்தைகள் இவரின் பாதுகாப்பில் இருந்தனர், எனவே, 2000ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகள் மற்றும் தொழில் என இரண்டில் மட்டுமே கவனம் செலுத்தினார். மேலும், அவரின் தந்தை நடத்தி வந்த வி டி சுவாமி அண்ட் கம்பெனி நிறுவனத்தை நடத்த துவங்கினார்.

swamy

2005ம் வருடம் ஒரு கார் விபத்தில் சிக்கி அவரின் முதுகு தண்டில் பலத்த அடிபட்டது. அதனால், அவரின் கால்கள் செயல் இழந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. 5 வருடங்கள் சிகிச்சை பெற்றார். அதிக மருந்துகளை எடுத்துக்கொண்டதால் பக்க விளைவாக உடல் எடை கூடி, தலைமுடியும் கொட்டி ஆளே மாறினார். மருத்துவர்களின் சிகிச்சையில் குணமடைந்த அரவிந்த் சாமி மீண்டும் தனது தொழிலில் கவனம் செலுத்தினார்.

swamy

தனது நிறுவனத்தை InterPro Global என பெயர் மாற்றினார். அதன்பின் Talent Maximus என்ற நிறுவனதையும் துவங்கினார். Rocket Reach போன்ற இணையதளங்களை இந்த நிறுவனம்தான் நடத்துகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.3,300 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து தனக்கு பிடித்த கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். இவர் நடித்து வெளியான தனி ஒருவன், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: டி50 படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்கள்!. கொத்தாக தூக்கிய தனுஷ்.. சம்பவம் இருக்கு போல!..

google news
Continue Reading

More in Cinema News

To Top