நான் இனி நடிக்கவே மாட்டேன்...! அங்கதான் போகப்போறேன்..! மனம் திறக்கிறார் அரவிந்த் சாமி..

by Rohini |
ara_main_cine
X

90 களில் பொண்ணுங்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. ஒரு ட்ரீம் பாயாகவே வலம் வந்தார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் சில பேர் கூட இவருடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆசைப்பட்டனர்.அதில் குஷ்புவுன் ஒருத்தர்.

ara1_cine

அவரை மிக உச்சத்திற்கு கொண்டு சென்று சேர்த்த படம் ரோஜா. அந்த படத்தில் அவரை அழகாக காட்டியிருப்பார்கள். நடிகை மதுபாலாவுடன் செய்யும் ரொமான்ஸை பார்த்து இப்படி ஒரு கணவன் கிடைக்கனும்னு ஆசைப்பட்ட பெண்களும் உண்டு.

ara2_cine

ஒரு சில படங்களில் நடித்து நடிப்பிற்கு பெரிய இடைவெளி விட்டு சென்றார். உதாரணமாகவே அவரை சொல்ல ஆரம்பித்தனர். நீ என்ன பெரிய அரவிந்தசாமி?னு சொல்லுமளவிற்கு வளர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் ஒரு கம் பேக் கொடுத்து எல்லாரையும் அசத்தினார். அந்த படத்தில் அவரின் ஸ்டைல் அடிச்சக்க யாரும் இல்ல.

ara3_cine

அதன்பின் தனி ஒருவன், செக்க செவந்த வானம் என படங்களில் ஆர்வம் காட்டியவர் திடீரென எந்த ஒரு படத்திலும்
கமிட் ஆகாமல் இருந்தார். காரணம் தெரிய பேட்டி எடுத்த போது நான் இனி நடிக்க மாட்டேன், படம் இயக்கத்தான் போறேன், ஸ்க்ரிப்ட் கூட ரெடியா இருக்கு, பொருத்தமானவர்கள் இருந்தால் சீக்கிரம் படம் சூட்டிங் ஆரம்பிச்சுருவேன் என கூறினார். ஆனா நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறினார்.

Next Story