என்னோட கேரக்டர் இது தான்..தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..! ரசிகர்களை ஷாக் ஆக்கிய அரவிந்த் சாமி..

by Rohini |
ara_main_cine
X

தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக பெண்களின் மனதை கொள்ளை கொண்டவருமான ஆணழகன் நடிகர் அரவிந்த் சாமி. இவரின் அழகுக்கு மயங்காத பெண்களே இல்லை. அந்த அளவிற்கு கொள்ளை அழகு வாய்க்கப் பெற்றவர். சினிமாவின் பொக்கிஷம் என்றே கூறலாம்.

ara1_cine

ரோஜா படத்தில் இவரின் நடிப்பு, ஸ்டைல், அழகு, ரொமான்ஸ் இவற்றையெல்லாம் பார்த்து பெண் ரசிகர்கள் எல்லாரும் எனக்கு அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்றே கேட்க ஆரம்பித்தனர். மேலும் பல சினிமா படங்களிலு இவரின் பெயரை பயன்படுத்தி இருப்பார்கள்.

ara2_cine

பெரிய அரவிந்த் சாமி கலரு என்று கலாய்த்தும் இருப்பார்கள். இப்படி பட்டவரிடம் சமீபத்தில் பேட்டி காண்கையில் வியத்தகு தகவல்களை கூறினார். யாராவது உங்களிடம் வந்து காதல் சொன்னதுண்டா? என ஆங்கர் கேட்டார். அதற்கு அப்படி எதும் இல்லை. ஆனால் நிறைய ரிலேஷன்ஷிப் இருந்திருக்கிறேன் என்று கூறினார்.

ara3_cine

மேலும் அரவிந்த் சாமி போன்று பையன் வேண்டும் என சொல்லும் பெண்களுக்கு நீங்கள் சொல்வது என்ன ? என கேட்க என்னை பற்றி முழுவதுமாக தெரிந்தால் யாரும் இப்படி கூறியிருக்க மாட்டார்கள். ஏன் என்னுடைய அப்பா அம்மாவிற்கே தெரியாது என்னை பற்றி என்று கூலாக கூறினார். அவர் ஏற்கெனவே ஒரு பேட்டியில் போகன் படத்தில் உள்ள கதாபாத்திரம் மாதிரிதான் உண்மையிலயும் இருப்பேன் என்று கூறியிருந்தார்.

Next Story