மணிரத்தினம் இயக்கிய தளபதி திரைப்படத்தில் கலெக்டராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் அரவிந்த்சாமி. அதன்பின் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.. தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகான ஹீரோ கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் நினைத்தார்கள்..
அரவிந்த்சாமி மாதிரி ஒரு கணவன் வேண்டுமென பல பெண்களும் ஆசைப்பட்டார்கள்..
தொடர்ந்து பல படங்களிலும் ஹீரோவாக நடித்த அரவிந்த்சாமி ஒரு கட்டத்தில் திடீரென நடிப்பதை நிறுத்தினார்.. அதன்பின் 10, 15 வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.
அதன்பின், ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.. அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் அரவிந்த்சாமி.. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த அரவிந்த்சாமி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
2005ம் வருடம் எனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒன்றை வருடம் படுக்கையில் கிடந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என முடிவு செய்ததால் அந்த வலி நீண்ட காலம் தொடர்ந்தது.. பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நேரத்தில் கேரளாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை சந்தித்தே. அவர் கொடுத்த சிகிச்சையால் மூன்று நாட்களிலேயே நான் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்’ என சொல்லியிருக்கிறார்.




