மனோபாலா ஆத்மா சாந்தியடைய அரவிந்த்சாமி இத செய்யனும்!.. வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்..

by Rohini |   ( Updated:2023-05-07 07:00:30  )
manobala
X

manobala

தமிழ் சினிமா சமீபத்தில் ஒரு மிகப்பெரிய மனிதரை இழந்துள்ளது. மனோபாலாவின் மறைவு திரையுலகை சார்ந்த அனைவருக்கும் ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய ஒரு நடிகராக இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் வலம் வந்தார் மனோபாலா.

mano1

mano1

யாரிடமும் பகைமை பாராது அனைவரிடமும் நல்ல மனதோடும் பண்போடும் பழகக்கூடிய ஒரு மனிதர் மனோபாலா. கோபத்திற்கும் மனோபாலாவிற்கும் மிகப்பெரிய தூரம் என அவரை சுற்றியுள்ள நெருங்கிய நண்பர்கள் அனைவரும் கூறுவது இதுதான். சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகராக மனோபாலா திகழ்ந்து வந்தார்.

ஆகாய கங்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முதன்முதலில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதனைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட பல படங்களை இயக்கி அதையும் தாண்டி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

mano2

mano2

நடிகை ராதிகாவே மனோபாலாவை வைத்து பல படங்களை இயக்கியுள்ளாராம் .ஏனெனில் சிக்கனமாக படம் எடுப்பதில் மனோபாலாவை மிஞ்சிய வேற எந்த இயக்குனரும் இல்லை என கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமான சதுரங்க வேட்டை படத்தையும் தயாரித்தவர் மனோபாலா தான். எச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படம் மிகப்பெரிய வசூலை மனோபாலாவிற்கு பெற்று தந்தது.

அந்தப் படத்தை தொடர்ந்து பகாசூரன் படத்தையும் தயாரித்து இருக்கிறார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே ராஜன் மனோபாலாவை குறித்த ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது சதுரங்க வேட்டை படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது .அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களை தயாரித்த மனோபாலாவிற்கு ஓரளவிற்கு தான் வசூல் வந்ததாம். ஆனால் நடிகர் அரவிந்த் சாமியை வைத்து தயாரித்த படமான சதுரங்க வேட்டை 2 படம் முற்றுப்பெற்ற நிலையிலும் இன்னும் அந்த படம் வெளிவராமல் இருக்கிறதாம்.

mano3

mano3

அந்தப் படத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அந்த பிரச்சனை காரணமாக வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறுகிறார் கே ராஜன். அதனால் அரவிந்தசாமி நினைத்தால் அந்த வழக்கை விரைவில் முடித்து அந்த படத்தை வெளியிட உதவலாம் என கூறி இருக்கிறார். மனோ பாலாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அரவிந்த்சாமி இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் கே ராஜன் கூறியிருக்கிறார்.

Next Story