Categories: latest news

நான் எப்படி நம்புறது? விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டேன்.. நடிகர்கள் அரசியலை பற்றி அப்பவே சொன்ன அரவிந்த்சாமி

Actor Aravindswamy: தமிழ் சினிமாவில் விஜய், அஜித்துக்கு முன்பாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சூப்பர் ஹீரோ நம்ம ஆணழகன் அரவிந்த்சாமி. எண்ணிச் சொல்லும்படியான படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனாலும் அவரை பற்றிய ஒரு இம்பேக்ட் இன்றளவும் மக்கள் மனதில் இருந்த வண்ணம் இருக்கின்றன.

அரவிந்த்சாமி என்று சொன்னதும் வாயை பிளந்து அண்ணாந்து பார்க்கும் பெண் ரசிகைகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ரோஜா என்ற ஒரே ஒரு படம். ஒட்டுமொத்த சினிமா பெண் ரசிகைகளையும் தன் காலடியில் விழ வைத்தவர்.

இதையும் படிங்க: அதிக பாடகர்கள் பாடிய ஒரே படம்! நம்ம கேப்டன் படம்தான்.. என்ன படம்னு நீங்களே பாருங்க

அன்று விழந்தவர்கள் இன்னும் எழுந்திருக்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் ரோஜா ஏற்படுத்திய அந்த மாஸ்தான் அவர் பெயரை சொல்லிக் கொண்டு இருக்கின்றன. தற்போது கதைக்கு முக்கியத்துவம் என்றால் நடித்துக் கொடுக்கிறார்.

இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அவர் பேசிய ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது: நான் ரஜினி சாரோட பெரிய ரசிகன். கமல் சாரோட பெரிய ரசிகன். விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நான் ஓட்டுப் போட மாட்டேன். அப்படி ஓட்டுப் போடவும் கூடாது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் அப்படி போட மாட்டேன்.

இதையும் படிங்க: போதும் செல்லம்.. இதுக்கு மேல முடியாது!.. வேறலெவல் க்யூட்னஸில் சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்…

நீங்கள் சொல்கிற விஷயங்கள் எதாவது மாற்றங்களை கொண்டு வரப் போகிறதா? என எனக்கு முதலில் ரீச் ஆக வேண்டும். நீங்க பெரிய நடிகராக இருக்கிறீர்கள். நீங்கள் அரசு சம்பந்தப்பட்ட பாலிசிகளை டிராஃப்ட் பண்ணுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறது என நான் எப்படி நம்புவது?

உங்களுக்கு என நல்ல எண்ணங்கள் இருக்கலாம். இத்தனை நாளாக படத்தில் காட்டிய ஹீரோயிசத்தை நம்பி உண்மையிலேயே அப்படித்தான் பொது வாழ்விலும் இருப்போம் என நினைத்து கூட அரசியலில் இறங்கியிருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை ஆளுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதை பற்றிய புரிதல் இருக்குமா?

அதற்காக உங்களால் பண்ண முடியாது என சொல்ல வரல. பண்ண முடியும். உங்களை சுற்றி பெரிய கூட்டம் இருக்கலாம். பல நல்ல மனிதர்கள் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் பற்றி ஒரு தலைவராக நீங்கள் நன்கு அறிந்து கொண்ட பின்னரே இதில் நிலைக்க முடியும் என ஒரு பெரிய விளக்கத்தையே கொடுத்திருக்கிறார் அரவிந்த்சாமி.

இதையும் படிங்க: விஜயகாந்த் ஆசை தான் போல!… இடத்துக்காக எதுவும் கேட்கவில்லை பிரேமா!… கலங்கிய தியாகு

 

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago