பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியை பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றத்துக்கு பின்னர் யாருமே பார்க்க மாட்டோம் என சொல்லிவிட்டு அர்ச்சனா வெற்றி பெற 19 கோடி வாக்குகள் போடப்பட்டதாக சொல்லப்படுவதெல்லாம் எந்த ஊர் லாஜிக் என்றே தெரியவில்லை.
டிஆர்பியிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில சீசன்களாக பெரிய அடிவாங்கி வருகிறது. இந்த சீசனில் கமல்ஹாசன் மீதே கடும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. கடைசியில் மாயாவுக்கு பதில் அர்ச்சனாவுக்கு டைட்டில் கொடுத்த நிலையில், மக்கள் அமைதியாகி அந்த நிகழ்ச்சியையே மறந்து விட்டனர்.
இதையும் படிங்க: என் புருஷன் என்னோட சின்ன பையனா இருந்தா என்ன தப்பு!.. சூப்பர் சிங்கர் பாடகி சொல்றதை கேளுங்க!..
ஆனால், மாயா மற்றும் அவரது கேங் தொடர்ந்து அர்ச்சனா பிஆர் வச்சுத் தான் இந்த ஷோவுல ஜெயிச்சா என நிகழ்ச்சி முடியும் போதே பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்த நிலையில், பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு டைட்டில் வின்னர் அர்ச்சனா செல்லவில்லை என்கின்றனர்.
சமீபத்தில் அர்ச்சனா கொடுத்த பேட்டியிலும், பிரதீப் ஆண்டனிக்கு அநீதி இழைக்கப்பட்டது குறித்து ஓப்பனாக பேசிய நிலையில், மீண்டும் அர்ச்சனாவுக்கு எதிராக மாயா கேங் சோஷியல் மீடியா அப்யூஸ் செய்ய ஆரம்பித்து இருக்கிறது என்கின்றனர்.
இதையும் படிங்க: ஆடியோ லாஞ்சுக்கு ஏன் வரது இல்ல!.. யோகி பாபு சொன்ன அடடே விளக்கம்!.. மத்தவங்களாம் நடிக்கலையா?..
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கெஞ்சி கேட்டுக்கிறேன்.. யாரையும் ட்ரோல் பண்ணாதீங்க, தேவையில்லாமல் போட்டியாளர்களை திட்ட வேண்டாம்.. விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தால் சரி, அதை தாண்டி அநாகரிகமான முறையில் பேசுவதை தவிர்க்கவும்” என பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவை பார்த்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா, “ரெஸ்பெக்ட்” என போட்டு நன்றி தெரிவித்து இருக்கிறார். கடந்த சீசனிலேயே பிஆர் வைத்து விளையாடியாதை போட்டியாளர்கள் பேசி வந்த நிலையில், இந்த சீசனில் அது இன்னமும் மோசமாகி விட்டது. இதில், மக்கள் இத்தனை கோடி ஓட்டு போட்டார்கள் என இனியும் விஜய் டிவி உருட்டுவது காமெடி என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஃபெயிலியர் ஆகிவிட்டது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…