கோட் படத்தின் புதிய வீடியோ!.. ரிலீஸுக்கு முன் ஒரு ட்ரீட்!.. அர்ச்சனா கொடுத்த அப்டேட்!..
Goat: ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கோட். இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தின் 4 பாடல்கள் வெளியானது. ஆனால், 2 பாடல்கள் மட்டும் ஓரளவுக்கு தேறியது. ஆனாலும், படம் வெளியான பின் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என வெங்கட்பிரபு சொல்லி இருக்கிறார். சார்ஸ் என சொல்லப்படும் தீவிரவாத எதிர்ப்பு குழுவில் இருக்கிறார் விஜய். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த். அஜ்மல் என எல்லோரும் பணிபுரிகிறார்கள்.
இதையும் படிங்க: விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?
அப்போது அவர்கள் ஒரு விஷயம் பின்னாளில் எப்படி பிரச்சனையாக மாறுகிறது என்பதே படத்தின் திரைக்கதை. எனவே, ஆங்கில பட பாணியில் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த படத்தில் விஜயின் மகனாக விஜயே நடித்திருக்கிறார். ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் சிறு வயது போல விஜயை கொண்டு வந்திருக்கிறார்கள். மைக் மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
அதோடு, மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அதோடு, ஏற்கனவே ஒரு காட்சியில் மங்காத்தா படத்தில் அஜித் பேசிய வசனத்தை விஜய் பேசியிருந்தது டிரெய்லரில் வந்தது. அதேபோல், படத்தில் அஜித்தையும் ஒரு காட்சியில் ரெஃபரன்ஸாக பயன்படுத்தி இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: கோட் டிக்கெட் விலை 2 ஆயிரமா? ரசிகர்களிடம் ஏன் பிடுங்கி திங்கிறீர்கள்… விளாசும் பிரபலம்
இப்படி படத்தில் பல சர்ப்பரைஸ்கள் இருப்பதால் கண்டிப்பாக கோட் திரைப்படம் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் செப்டம்பர் 5ம் தேதியான நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, பல மாநிலங்களிலும் முன்பதிவு களை கட்டி வருகிறது.
இந்நிலையில், கோட் படத்தின் புரமோ வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருக்கிறது.