ப்ப்பா!.. செம யங்கா இருக்காரே தளபதி விஜய்!. கோட் பட போட்டோக்களை பகிர்ந்த தயாரிப்பாளர்..
Goat: லியோ படத்திற்கு பின் விஜய் நடித்து வெளியாகயுள்ள திரைப்படம்தான் கோட். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார். வழக்கமாக விஜய் படம் என்றால் அதில் அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரும் ’ரா’வின் துணை அமைப்பான சாட்ஸ் அதாவது சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படையில் பணிபுரிந்தவர்கள். இளமையில் அவர்கள் வேலை ரீதியாக செய்த ஒரு விஷயம் பின்னாளில் அவர்களுக்கு எப்படி பிரச்சனையக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை.
அப்படி விஜய் டீமுக்கு குடைச்சல் கொடுக்கும் வில்லனாக மைக் மோகன் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் விஜயின் மகனான இன்னொரு விஜயும் வில்லனின் கூட்டத்தில் இணைந்துவிட விஜய் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. எனவே, அதிரடி ஆக்ஷன் கதையாக கோட் படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, கண்டிப்பாக கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்கு பின் விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்திற்கு பின் விஜயின் புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். விஜய் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளதால் இதுதான் அவரின் கடைசி திரைப்படம் என சொல்லப்படுகிறது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பின்னரே விஜய் என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவரும்.
இந்நிலையில், கோட் படம் தொடர்பான புகைப்படங்களை இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். இளமையான தோற்றத்தில் விஜய் இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.