கோட் பட பட்ஜெட்!.. விஜயின் சம்பளம் இதுதான்!. அட அர்ச்சனாவே சொல்லிட்டாங்களே!...

by சிவா |   ( Updated:2024-08-31 13:27:22  )
goat
X

#image_title

Goat: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் கோட். விஜய் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு காரணம் அஜித் ரசிகர்கள் இப்போது வரை கொண்டாடும் மங்காத்தா படம் போல விஜய்க்கும் ஒரு படத்தை வெங்கட்பிரபு கொடுத்திருப்பார் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

படத்தின் டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போதும் படம் நன்றாக வந்திருப்பதாகவே உணரமுடிகிறது. இப்படத்தின் கதை ஹாலிவுட் பட பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கா ஆக்‌ஷன் விருந்தாக இப்படம் உருவாகியிருக்கிறது. மேலும், அப்பா - மகன் என விஜய் கலக்கவிருக்கிறார்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தின் 4வது சிங்கிளும் போச்சா? மொத்தமா ஏமாத்திபுட்டாங்கப்பா..

இதில், ஹாலிவுட்டுக்கு போய் ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் மகன் விஜயை மிகவும் இளமையாக காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு. மேலும், ஏஐ மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் ஒரு காட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, ஒரு காட்சியில் அஜித்தின் குரலோ, அல்லது புகைப்படமோ ஒன்று வரும் என்றெல்லாம் சொல்லி ஹைப் ஏற்றியிருக்கிறார் வெங்கட்பிரபு.

கோட் திரைப்படத்தில் விஜயின் சம்பளம் 200 கோடி என முதலில் சொன்னார்கள். அதன் பின்னர் 150 கோடி சம்பளம் மற்றும் வரும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என சொன்னார்கள். அதோடு, படத்தின் மொத்த பட்ஜெட் 333.15 கோடி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், தற்போது இதுபற்றி உண்மையான தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஊடகமொன்றில் சொல்லியிருக்கிறார்.

goat

#image_title

விஜயின் சம்பளம் 200 கோடி என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், ஜி.எஸ்.டியோடு சேர்த்து இப்படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என சொல்லி இருக்கிறார். அதாவது, விஜயின் சம்பளம் 200 கோடி போக, மீதி 200 கோடி செலவில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதுபற்றி பேசிய அர்ச்சனா ‘விஜய் சார் படங்களின் வியாபாரம் தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளா, ஆந்திரா, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடு என எல்லாவற்றிலும் அவர் படங்களுக்கு வியாபாரம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் சம்பளம் இல்லாமல் 200 கோடி செலவு செய்தோம். அப்படி செலவு செய்து எங்களுக்கு இப்படம் லாபம்தான்’ என சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்கு அனிருத் வேணும்… யாரோ தாக்கப்பட்டாங்களோ?

Next Story