Connect with us

ஹீரோயினை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகும் வில்லி நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

vj archana

Cinema News

ஹீரோயினை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகும் வில்லி நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

படமாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஹீரோ ஹீரோயின் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வில்லன் மற்றும் வில்லி கேரக்டர் மிகவும் முக்கியம். ஒரு ஹீரோவுக்கு சமமாக டஃப் கொடுத்தால் தான் அந்த வில்லன் அல்லது வில்லி கேரக்டர் மக்கள் மனதில் ஆழமாக பதியும்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் தான் நடிகை விஜே அர்ச்சனா. இவரை திட்டாத பெண்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சொந்த மாமியார் குடும்பத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருகிறார் அர்ச்சனா.

raja rani 2

இவரது வில்லத்தனமான நடிப்பு நன்றாக இருப்பதால் தான் அர்ச்சனாவை அனைவரும் அர்ச்சனை செய்து வருகிறார்கள். ராஜா ராணி என்றாலே அர்ச்சனா தான் எனும் அளவிற்கு பெயர் பெற்ற நிலையில், தற்போது அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாங்க ஏற்கனவே இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த நடிகை ஆல்யா மானசா பிரசவம் காரணமாக சீரியலை விட்டு விலகினார். தற்போது அவருக்கு பதில் அந்த கேரக்டரில் ரியா என்ற புதிய நடிகை ஒருவர் நடித்து வருகிறார்.

archana

ஏற்கனவே நாயகி ஆல்யா வெளியேறிய நிலையில், தற்போது வில்லியான அர்ச்சனாவும் சீரியலை விட்டு விலக உள்ளதாக வெளியாகும் செய்திகளால் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top