என் புருஷனை இழந்துட்டேன்! டைவர்ஸ்க்கு கூட அப்ளே பண்ணிட்டேன்! -  விழாவில் கண்ணீர் சிந்திய அர்ச்சனா!

by Rajkumar |
என் புருஷனை இழந்துட்டேன்! டைவர்ஸ்க்கு கூட அப்ளே பண்ணிட்டேன்! -  விழாவில் கண்ணீர் சிந்திய அர்ச்சனா!
X

பல வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா. இவர் கிட்டத்தட்ட 23 வருடங்களாக சின்ன திரையில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். 2000 ஆம் ஆண்டில் முதன் முதலாக சன் டிவியில் ஒளிப்பரப்பான காமெடி டைம் என்னும் நிகழ்ச்சியில் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட 7 வருடங்கள் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பிறகு அவருக்கு அதிக தொலைக்காட்சிகளில் வாய்ப்புகள் கிடைத்தன. ஜீ தமிழ், விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அர்ச்சனா.

ஆனால் அதிகமாக ஸ்டார் விஜய்யின் நிகழ்ச்சிகளைதான் தொகுத்து வழங்கியுள்ளார். தற்சமயம் அவரது மகள் சாராவும் கூட தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். அர்ச்சனா சின்ன திரைக்கு வந்து 23 வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த விழாவில் அவரது கணவர் காணொளி மூலமாக அவருக்கு வாழ்த்துகளை கூறினார். அதை கேட்டதும் அழத் துவங்கிவிட்டார் அர்ச்சனா. இதுக்குறித்து அவர் பேசும்போது ஒரு மாதம் முன்பே அவர் தன் கணவரிடம் இருந்து டைவர்ஸ் பெறுவதற்காக விண்ணப்பிக்க இருந்துள்ளார்.

இருவருக்கும் ஒத்துவராது என்கிற மனநிலையில் இருந்துள்ளார். இதை அறிந்த அவரது மகள் சாரா. இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தியுள்ளார். நிறைய காரணங்களால் தனது கணவனை இழக்க இருந்ததாகவும், கடந்த 15 நாட்களாகதான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் தனது கணவர் பாராட்டி அனுப்பிய வீடியோவை கண்டதும் அர்ச்சனாவில் அழுகையை அடக்க முடியவில்லை என பேட்டியில் கூறியிருந்தார்.

Next Story