அவர் பண்ணுறதுக்கு என்னை அடிச்சா எப்படி? திடீரென அர்ச்சனா பதிவிட்டு ட்வீட்…

by Akhilan |
அவர் பண்ணுறதுக்கு என்னை அடிச்சா எப்படி? திடீரென அர்ச்சனா பதிவிட்டு ட்வீட்…
X

Archana_Ravichandran

Archana: முந்தையை பிக்பாஸ் தமிழ் போட்டியாளரான அர்ச்சனா தன்னுடைய எக்ஸ் கணக்கில் இருந்து திடீர் ட்வீட்டை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அர்ச்சனா ரவிசந்திரன் சீரியல் மூலம் புகழ் பெற்றாலும் கடந்த சீசன் பிக்பாஸில் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வந்தார். இருந்தும் தன்னுடைய ஆட்டத்தால் உள்ளே இருந்தவர்களை தூக்கி சாப்பிட்டார். அதிரடியாக விளையாடி கடந்த சீசன் டைட்டிலையும் வென்றார்.

இதையும் படிங்க: Jyothika: கை கொடுக்க ஓடி வந்த ரசிகை.. ஜோதிகாவின் ரியாக்‌ஷன்! திருப்பதியில் நடந்த சம்பவம்

இரண்டாவது பெண் டைட்டில் வின்னர் மற்றும் முதல் வைல்ட் கார்ட் வின்னராக புகழ்பெற்றார். இதை தொடர்ந்து பிக்பாஸில் அதிக ஓட்டுக்களை குவித்த முதல் போட்டியாளராக அர்ச்சனா ஹிட்டடித்தாலும் பிஆர் ஏஜென்சியை வைத்து தனக்கான வெற்றியை தட்டி பறித்தாக குற்றம் சாட்டினர்.

அப்போது வரை அமைதியாக இருந்த அர்ச்சனா இந்த சீசனில் நண்பர் அருண் பிரசாத்தை உள்ளே அனுப்பி இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு அவரால் கன்டெண்ட் கொடுக்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அவருக்கு சப்போர்ட்டாக இருக்கும் அர்ச்சனாவுக்கு வசை விழுந்து வருகிறது.

இதற்காக இந்த வாழ்க்கைக்கு என் நான் இருக்கும் இடத்திற்காக சவால்கள், விமர்சனங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களை எதிர்கொண்டேன். ஆனால் அந்த கடின உழைப்புக்கு மதிப்பளிக்காமல் நான் சம்பந்தப்படாத ஒரு விஷயத்தை என் பெயரில் இழுத்து விடுகின்றனர்.

#அருண்பிரசாத்தும் நானும் இரண்டு வெவ்வேறு நபர்கள். ஒரு நண்பராக நான் அவரை ஆதரிக்கிறேன். ஆனால் அவருடைய செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. இங்கு வருவதற்கு நான் போராடினேன் என்பதை மக்கள் மறந்துவிடுவதைப் பார்ப்பது என் இதயத்தை உடைக்கிறது. நீங்கள் எனக்குக் காட்டிய அன்பையும் ஆதரவையும் நான் எப்போதும் மதிக்கிறேன், மேலும் நான் அங்கம் வகிக்காத ஒன்றிற்காக என்னைக் கிழிக்க வேண்டாம் என்று என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: அன்னைக்கு அபர்னதி இன்னைக்கி பிரியா பவானி சங்கரா..? நயன்தாரா ரூட்டை கையில் எடுக்கும் நடிகைகள்!..

archana

archana

தொடர்ச்சியாக அருண் என்னுடைய உலகம். அவரை என்றுமே நான் விட்டு விட மாட்டேன். இந்த உலகமே அவரை எதிர்த்தாலும் நான் அவருடன் இருப்பேன். என்னை பற்றி அறியாமல் யூட்யூப் மூலம் தவறான தகவல்களை பரப்பவர்களுக்கு இந்த விளக்கம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story